பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Tuesday, 19 October 2021
Wednesday, 13 October 2021
சலீம் அண்ணனின் இந்த புகைபடத்தை பார்த்தவுடன் என்னை அறியாமல் பல வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் எல்லாம் என் உள்ளத்தில் பசுமையாய் நிழலாடுகிறது.சுமாராக 20 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கின்றேன். நான் சின்ன பையன், எங்கள் தெருவில் எங்களுடைய வீடு தான் கடைசியாக இருக்கும், பாம்புகளுக்கு பொழுது போகவில்லை என்றால் எங்கள் தெருவில் தான் விளையாடும். ஒரு நாள் கருநாக பாம்பு ஒன்று எங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டது. மஃரிப் நேரம் என்று நினைக்கின்றேன் அடிக்க முயற்சி செய்தார்கள் முடியவில்லை. குமார் என்ற ஒரு சகோதரர் அன்று எங்கள் பகுதியில் வேலை செய்து வந்தார். அவர் அந்த பாம்பை ஒரு அடி அடித்து விட்டேன் அது தப்பித்துவிட்டது, என்னை காட்டம் வைத்து துரத்தும் என்று நாகப்பாம்பின் கதை ஒன்றை சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இரவு முழுக்க கனவில் நாகப்பாம்பு தான். காலையில் பஜ்ர் தொழுகைக்காக எழுந்து வெளியில் வந்தால் குமார் வாசலில் நிற்கின்றார். எனக்கு தூக்கம் வரல தம்பி பாம்பை நினைத்து ஒரே கவலை அதான், கொஞ்சம் தடம் எங்க இருக்குனு பாப்போம் என்று நிற்கின்றார். தொழுதுவிட்டு வந்தால் பாம்பின் தடம் எங்க வீட்டுக்குள் இல்லை. அருகில் இருக்கும் சிராஜ் மச்சான் வீட்டிற்குள் இருந்தது. பாம்பு வேலி தாண்டிவிட்டது. அன்று அந்த இடத்தை தோப்பாக பயன்படுத்தினார்கள். தடம் பயங்கர பெரிதாக இருந்ததால் குமாரே இன்னுன் இரண்டு பேர் கூப்பிட்டால் நல்லது என்று கூறிவிட்டார். சிராஜ் மச்சானோடு நல்ல நண்பர் சலீம் அண்ணன். சலீம் அண்ணனோட ஸ்டைலே தனிதான். ஒரு பெரிய குத்து கம்பு (ஈட்டி), தோலில் ஒரு சவுதி டவலுடன் வந்தார். டேய் குமாரு நீனே பெரிய ஆளு, என்ன ஏண்டா கூப்பிட்ர. கள்ள ஹாஜி எங்க! ஓ பாம்புனா ஆளு எஸ்கேப் ஆகிருப்பாரே! அட நீங்க வேற சலீம் அண்ண, ரெம்ப பெருசுன! என்ன படம் வேற எடுத்துருச்சுன. ஏண்டா!அது என்ன டைரக்டரா? படம் எடுக்குறதுக்கு. போடா மூதேவி! தூக்குட இதெல்லாம். ஒரு அரை மணி நேர தேடலுக்கு பின்!அண்ண் இது தான் கடைசி கிடுகு கட்டு! இதுக்குல தான் இருக்கும். நல்லது தானே தூக்கு அந்த கிடுகு கட்ட! குமார் தூக்குன உடன நல்ல பாம்பு ஓட ஆரம்பிச்சது. அட்ரா! அட்ரா! குமாரு அட்ரா! அண்ண! நல்ல பாம்புனா! டேய் அது கெட்ட பாம்பு! போட்ற!! போகுது அட்ரா!!அண்ண! அண்ண! என்னடா நொண்ணன்! பீப் சவுண்ட் தூக்குடா!ஈட்டில குத்தி ஒரே துக்கு! பாம்பு கத முடிஞ்சது. பக்கதுல இருந்த எல்லோரும், நல்ல பாம்பு பாலும், அரிசியும் போட்டு தான் அடக்கம் பண்ணனும். அது சரி இதுக்கு பாலும், அரிசியும் வேற கேட்குதா! குழிய தோண்டுங்க தம்பி. பால என்னட்ட குடுங்க, அரிசிய குமார்ட்ட கொடுங்க! மனுசனே! பாலும், அரிசியும் இல்லாம செத்துகிட்டு இருக்கான். இதுல இதுக்கு வேறையா? .. மண்ணல்லி போட்டு கதைய முடிங்க!அண்ண எந்துரிச்சு உயிரோட வந்துரும்ன! போடா முட்டா பயலே! எந்த காலத்துலட பாம்பு எந்திருச்சு வந்துச்சு. போடா போய் வேலைய பாருடானு குமார்ட்ட சொன்ன அந்த மூட நம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவு சித்தாந்தம் என்னை அறியாமல் எனக்குள் புகுந்ததை இன்றும் உணர்கின்றேன்.கல்லூரி காலஙகளில் நள்ளிரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வந்து, எங்கள் தெருவின் முக்கை அடையும் போது சலீம் அண்ணனின் பவர்புல் டார்ச் லைட்டின் வெளிச்சன் என் மூஞ்சியில் அடிக்கும் அந்த ஒளியின் வெளிச்சத்தோடு, சலீம் அண்ணனின் வெண்கள குரல் காற்றில் கணீரெண்று வரும்! யார்ரா? அது !அண்ண நான் தான்! வாங்க வாங்க தம்பி! Waiting! என்பார். எங்கள் பகுதியின் பாதுகாவலர் அவர். பயமறியாதவர். இரவு நேரங்களில் திருடர்களோ, வேற்று மனிதர்களோ! நாயோ! மனிதனோ!சலீம் அண்ணனின் டார்ச் லைட் வெளிச்சத்தில் இருந்து தப்ப முடியாது. அந்த நீண்ட டவலையே தலைப்பாகையாக கட்டி கொண்டு டார்ச் லைட்டுடன் உரையாடிய இரவு நேரங்கள் மீண்டும் வாழ்வில் கிடைக்காதவை. இரவு நேர டார்ச் லைட் காவலாளிகளாக சலீம் அண்ணனையும், என் தந்தையுமே கண்டிருக்கின்றேன். எங்களது தெருவில் சிறு சத்தமோ? அல்லது நாயின் குறைப்போ கேட்டால் அடுத்த நிமிடம் எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து டார்ச் லைட் வெளிச்சம் பீறிடும். பள்ளிவாசல் திண்டும், கபர்ஸ்தான் மரங்களும், பாலம்மால் தர்ஹா சுவரும், அதை சுற்றிலும் இருக்கும் பனை மரங்களும் சலீம் அண்ணனின் டார்ச் லைட் ஒளிக்காக ஏங்க கூடும். அவரது கிராத்தும், ரமழானின் ஹிஸ்பு ஓதும் போது அவரது குர்ஆனின் புலமையும் அனைவரையும் அவரது கட்டுக்குள் கொண்டுவந்துவிடும். அண்ண இன்னக்கி நீங்க பாங்கு சொல்லுங்க! என்று அருகில் இருந்து அந்த குரலின் இனிமையை ரசித்த காலங்கள் பல உண்டு. அவர்கள் மறைந்து வருடங்கள் ஓடிவிட்டன. இன்று நம்மோடு அவர்கள் இல்லை. எனக்கு சிலரோடு இருந்த சிநேகங்கள் மிகவும் புனிதமானவை. என்னுடைய சமூகம் சார்ந்த கொள்கையை, லட்சியத்தை பட்டிய தீட்டியவை! நான் ஒருவனாக இந்த லட்சிய பாதையை பற்றி நின்ற போது கைகொடுத்தவை. இவர்களில் இன்னுன் சிலர் இருக்கின்றார்கள். இரவு நேர நண்பர்கள். அனைத்தும் எனது வயதுக்கு மீறிய நட்பு தான். காலம் வரும் போது அவர்களை குறித்து நினைவு கூறுகின்றேன். ஆனால் இவர்களோடு நான் உறவாடிய நேரம் முழுவதும், மனிதர்கள் உறங்கும் நேரம் தான். நடு நிசியும்,எங்கள் ஊரின் கப்ரஸ்தான் சுவர்களும் எங்களை தேட கூடும். இன்று அவர்கள் நம்மோடு இல்லை. ஆனால் நினைவுகள் உள்ளத்தில் பசுமையாக இருக்கின்றது. அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னித்து, மண்ணரையை விசாலமாக்கி, நாளை மறுமையில் உயர்ந்த சுவர்க்கமான ஜென்னதுல் பிர்தவஸில் பிரவேசிக்க செய்வானாக! ஆமீன்!!வலசை பைசல்.
Friday, 1 October 2021
புதுவலசை ஊராட்சியில் உள்ள பழைய இரும்பு கடை தெருவில் பல வருடங்களாக பழுதடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் இன்று மாற்றப்பட்டது ...அதனை தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள முதல் தெருவில் அரபி முகம்மது அவர்களின் வீட்டு அருகில் மின் கம்பிகள் மிகவும் ஆபத்தான நிலையில் தொய்வாக இருந்தது... அதனை புதிய மின்கம்பம் அமைத்து சரி செய்யப்பட்டது ...அதனை தொடர்ந்து ஊரில் உள்ள அனைத்து பழுதடைந்த மின் கம்பம் மற்றும் மின்கம்பிகள் தொய்வாக உள்ள இடங்களை கண்டரிந்து கூடிய விரைவில் அனைத்து இடங்களும் சரிசெய்யப்படும்... V.மீரான் ஒலிதலைவர்புதுவலசை ஊராட்சி
Subscribe to:
Posts (Atom)