Our student c.Naveen 9th std ramnad revenue district level sports meet long jump 2nd place. He goes to state level meet.
EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) நடத்திய)2016 2017-ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா
EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) நடத்திய)2016 2017-ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா
EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) நடத்திய)2016 2017-ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா
EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக 07.08.2017அன்று நமதூர் மதரஸா வழாகத்தில் பொழிவுடன் நடைபெற்றது. இதில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், 400-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
நமதூர் பள்ளி தொடக்கம் மற்றும் வளர்ச்சியின் வரலாறு
நமதூர் பள்ளி தொடக்கம் மற்றும் வளர்ச்சியின் வரலாறு
(இது நமதூர் மக்கள் அனைவருக்கும் ,இளம் மற்றும் வருங்கால சந்ததினர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் சேகரிக்கப்பட்ட தகவல் .)
நமதூர் பள்ளி மிகப்பெரும் பழமை வாய்ந்தது. இன்று பல்வேறு நாடுகளில் பல தளங்களில் பணியாற்றுபவர்களும், நமதூர் பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்று தங்களது அறிவை மெருகூட்டி வளர்ந்து நின்ற போதிலும்; அந்த பள்ளிக்காகவும், நமதூரின் முன்னேற்றத்திற்காகவும் தங்கள் சக்திகுட்பட்டு பங்களித்து வருகின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்....
இந்த வளர்ச்சியும், வெற்றியும் ஒரு அழகிய கூட்டு முயற்சியின் அடிப்படையில் நடந்தேரியது. அதே அடிப்படையில் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நமதூர் பள்ளிகளின் வரலாற்றை புரட்டும் போது நமக்கு காணக்கிடைக்கின்றன.
இந்த "சதக்கத்துல் ஜாரியா" என்னும் புனித பணியில் ஈடுபட்ட, ஈடுபட்டு கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரும் நினைவு கூற கடமைபட்டவர்கள்.
நமதூர் பள்ளிகளுக்கு சொந்தமான பரந்து விரிந்த நிலங்களை வக்பு செய்தவர் "சகோதரி. லைலா அம்மாள்"
நமதூர் பள்ளி கூடம் அமைப்பதற்கான திட்டமிடல்கள் நடந்து அதற்கு சரியான இடம் அவசியம் என்ற சூழ்நிலை வந்த போது பேனா. கானா. வகையராவை சேர்ந்த லைலா அம்மாள் என்ற ஒரு பெண்மணி மனமுவந்து தங்களது நிலத்தை பள்ளிகூடம் கட்டுவதற்கு தந்துதவியது காலத்தால் அளிக்க முடியாத நிகழ்வு. (6 முதல் 10-ஆம் வகுப்பிற்கான கட்டிடங்கள்இருக்கும் இடம்.) அவர்களது கணவர் செய்யது முஹம்மது. இவர்கள் இருவருக்கும் 7 குழந்தைகள்.
மர்ஹும். நூருதீன், மர்ஹும். மஜ்கர் தீன், மர்ஹும். மைதீன் தாஹா, சல்ஹா அம்மாள், ஆமினா அம்மாள், பைசூன் அம்மாள், ஜைனுல் அஸ்மா.
தானது தாய் லைலா அம்மாள் கொடுத்ததோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்களது மகன் நூர்தீன் அவர்கள் தனது சொந்த நிலத்தின் சிறு பகுதியயை பள்ளிக்காக கொடுத்தார்கள். (இன்று கறிகடையாக பயன்பாட்டில் இருக்கும் இடமும் அதில் அடங்கும்.)
தற்பொழுது நர்சரி பள்ளி கூடமாக இருக்கும் பழைய கட்டிடம் இருக்கும் இடம் ஜமாஅத்திற்கு பாத்தியப்பட்ட நிலம்.
ஒருங்கினைந்த பள்ளி கட்டிடத்திற்கான உதவிகள்
6 முதல் 10-ஆம் வகுப்பிற்கான கட்டிடங்கள் பல நல்ல உள்ளங்களின் கூட்டு முயற்சியால் இன்று உயர்ந்து நிற்கின்றது. நமது தொகுதிகளின் நாடாளு மன்றம் மற்றும் சட்ட மன்றம் உறுப்பினர்களால் தங்களது நிதிகளில் இருந்து வகுப்பறைகள் கட்டிதரப்பட்டன. ஹாஜி. தையூப் கான் அவர்களால் மூன்று வகுப்பறைகள் கட்டி தரப்பட்டுள்ளன.
நமதூர் வாசிகளின் நலனில் அக்கரை கொண்டு ஊர் முன்னேற்றத்தில் தங்களது பங்களிப்பை ஆற்றிவரும் அமீரகவாழ் நமதூர் வாசிகளின் EPMA அமைப்பு இரண்டு வகுப்பறைகள் கட்டித்தந்தது.
ஹாஜி. சேக் அமானுதீன் ஆசிரியர் அவர்களால் இரண்டு வகுப்பறைகள் கட்டி தந்திருக்கிறார்கள்.
நமதூர் பள்ளிகளுக்கு சுற்றுசுவர் அவசியம் என்ற சூழ்நிலை ஏற்பட்ட போது சௌதி அரேபியா வாழ் நமதூர் சகோதரர்களின் நல்ல முயற்சியால் இந்த சுற்று சுவர் சிறப்பாக கட்டி தரப்பட்டது. சுற்று சுவரின் உயரத்தை அதிகபடுத்த அவசியம் ஏற்பட்ட நேரத்தில் உயர்த்தி கட்டி தந்தவர் சகோ. பிர்தௌஸ் அவர்களின் மகன் சகோ. வக்கீல் ஆவார்கள்.
பள்ளி கட்டிட வளாகத்தில் பல்வேரு நிகழ்ச்சிகளை நடத்தும் வண்ணம் நிரந்தர மேடை கட்டி கொடுத்தது ஹாஜி. அப்துல் ஹமீத் அவர்கள்.
ஒன்று முதல் ஐந்து வாகுப்பு வரையினால் தொடக்க பள்ளி தொடங்கிய காலகட்டத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் நடந்துவந்தது. இக்கட்டிடம் பல வருடங்கள் ஆன காரணத்தினால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவானது. அதே நேரத்தில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகமானதால் போதிய இடவசதி இல்லாமல் போனது. இதனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக பள்ளிகளை தனித்து நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலை மாறி ஒருங்கினைந்த பள்ளி வளாகம் தேவை என்பதை உணர்ந்து முயற்சிகளை முன்னெடுத்த போது அதற்கான முடிவுகள் எட்டபடமால் இருந்தது. இச்சூழலில் தாஸின் அறக்கட்டளை நிருவனர் சகோ. தாஸின் அவர்கள் முதலில் நான்கு வகுப்பரைகள் கட்டிதர முன்வந்து குறிய காலத்தில் அக்கட்டிடம் பூர்த்தியானது. அவரது முன் முயற்சி மிகப்பெரும் பலன் தந்தது.
அவரை தொடர்ந்து ஜமாஅத் ஊரில் நிதி திரட்டி இரண்டு வளாகங்கள் கட்டியது. அப்பா குட்டி சகோ. ஜெய்னுல் ஆபீதீன் மற்றும் சகோ. அஸ்மத் ஹுஸைன் அவர்களால் இரண்டு வகுப்பரைகள் கட்டிதரப்பட்டது. ஹாஜி. அப்துல் ஹமீது அவர்களால் மூன்று வகுப்பரைகள் கட்டி தரப்பட்டது. சகோ. செய்யது இப்ராம்ஷா அவர்களால் இரண்டு வகுப்பரைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
சகோ. அப்துல் ரஹ்மான் அவர்களின் சார்பாக ஒரு வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது
இத்தனை நபர்களின் கூட்டு முயற்சியின் அடிப்படையில் இவர்களை ஒருங்கினைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பல நல்ல உள்ளங்களின் உழைப்பினாலும் இன்று நமதூர் அரபி ஒலியுல்லாஹ் பள்ளி ஒருங்கிணைந்த பள்ளிகூடமாக காட்சி அளிக்கிறது.
இதற்கான இடம் கொடுத்து அதற்கான ஒத்துழைப்புகளை கொடுத்துவரும் நமதூர் ஜமாஅத் பாரம்பரியமிக்க, பாராட்டுகுறியது என்பதில் ஐயமில்லை.
நர்சரி பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற நேரத்தில் யாரிடம் கட்டிடம் கட்டி கேட்பது என்ற இக்கட்டான சூழ்நிலையில், இடத்தை மட்டும் சொல்லுங்கள் கட்டிடங்களை நான் கட்டி தருகின்றேன் என்று முன்வந்தவர் சகோ. தாஸின் அவர்கள். அவர் தொடங்கினார் அவருடன் இணைந்து சகோ. ஷாஜகான் அவர்களும் இணைந்து இன்று ஒரு முழுமையான பள்ளி கட்டிட வளாகமாக உயர்ந்து நிற்கின்றது.
பள்ளி தரம் உயர்த்த உழைத்தவர்கள்
ஒன்றிலிருந்து ஐந்து வகுப்புகள் வரை கல்வி பயிலும் தொடக்க பள்ளியாக இருந்த நமதூர் பள்ளிகளை மர்ஹும்.. தியாகி தல்கான் (எங்களுடைய வாப்பா) அவர்களது முயற்சியால் எட்டாம் வகுப்புவரை கல்வி பயிலும் பள்ளியாக தரம் பெற்றது.
1998-ல் பல தொடர் முயற்சிகளுக்கு பிறகு ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பிற்கான அனுமதி அரசாங்கத்தால் வழங்கப்பட்டு இன்று அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலை பள்ளியாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
உயர் நிலை பள்ளிக்கான அனுமதியை பெறுவதற்கு முன்முயற்சி எடுத்தவர்களில் சகோ. தௌபீக் அவர்கள், மர்ஹும். குத்துபுதீன் அவர்கள், மர்ஹும் S.I. ஷா அவர்கள், ஹாஜி. சேக் அமானுதீன் ஆசிரியர் அவர்கள் ,சகோ. ஜெய்னுதீன் ஆசிரியர் அவர்கள், ஹாஜி. தையூப் கான் அவர்கள், சகோ. ஜவஹர் அலி அவர்கள், சகோ. வக்கீல் ஜாகிர் அலி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
உயர்நிலை பள்ளியாக இருக்கும் நமதூர் பள்ளிகளை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. 11,12 ஆம் வகுப்புகள் வரவேண்டும் என்பதற்காக கல்வி குழு தலைவர் சகோ. தாசின் அவர்களின் தலைமையில் நமதூர் ஜமாஅத்தும், பள்ளிகளின் தாளாளரும் மற்றும் EPMA அமைப்பினர் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள். இந்த கல்வி ஆண்டு அல்லது அடுத்த கல்வியாண்டில் இம்முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாமும் அதற்கு உறுதுணையாக செயல்படுவோம்.
பள்ளி நிர்வாக குழு
நமதூர் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் பள்ளியின் பெயர் "புதுவலசை பள்ளி கூடம்" என்ற பெயரிலேயே செயல்பட்டு வந்தது. பல கிராமங்களில் இருந்தும் நமது பள்ளி கூடத்தின் வாயிலாக பலர் கல்வி கற்று வந்தனர்.
இப்பள்ளியின் முதல் நிர்வாகியும், தாளாளரும் ஹாஜி. ஷாம் நெய்னா ஆவார்கள். நீண்ட காலம் ஹாஜியார் அவர்களின் நிர்வாக திறமையின் கீழ் இப்பள்ளிகூடம் செயல்பட்டதால் நாளடைவில் பல சமூக மக்களாலும் ஹாஜியார் பள்ளி கூடம் என்று அழைக்கப்பட்டு வந்தது.
பிற்காலத்தில் இது தனி நபருக்கு சொந்தமானது அல்ல பொது சொத்து என்பதை அறிந்து பள்ளிகளுக்கு "அரபி ஒலியுல்லாஹ் பள்ளி கூடம்" என்ற பொதுவான பெயர் சூட்டப்பட்டது. இந்த உண்மை அறிந்த மக்கள் இதனை மனமுவந்து ஏற்று கொண்டனர்.
தாளாளர்கள்
1. ஹாஜி. ஷாம் நெய்னா அவர்கள்,
2. அஹமது ஜலாலுதீன் (சேகு பகுர்தீன் அவர்களின் தந்தை),
3. கீனா.சீனா. அப்துல் காதர் அவர்கள்,
4. அபூபக்கர் அவர்கள்,
5. N.M.முஹம்மது அவர்கள்,
6. M.A.தல்கான் அவர்கள்,
7. .கீனா.சீனா.புகாரி அவர்கள்,
8. S.I.ஷா அவர்கள்
9. சாகுல் ஹமீத் அவர்கள்
10. N.அஹ்மது கபீர் அவர்கள்
11. சேக் அமனுதீன் ஆசிரியர் அவர்கள்
12. K.தௌபீக் அவர்கள்
13. ஜெய்னுதீன் ஆசிரியர் அவர்கள்
14. லியாகத் அலி கான் அவர்கள்
15. தையூப் கான் அவர்கள்
இப்பழம் பெரும் பள்ளி கூடம் சிறப்பாக திறம்பட நிர்வகிக்கப்பட்டு வருவதற்கு நமதூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபைக்கு நாம் ஒவ்வொருவரும் கடமை பட்டிருக்கின்றோம். பல்வேறு பிரச்சனைகள், குழப்பங்கள், பிரிவினைகள், சச்சரவுகள் வந்த போதிலும் இக்கல்வி கூடத்தை நடத்த முடியாமல் அடுத்தவர்களிடமோ, அரசாங்கத்திடமோ, கொடுக்காது மிக தெளிவாக, சிறப்பான திட்டமிடலுடன் முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்து செல்கின்றனர்.
நமதூரின் பாரம்பரியம் மிக்க பள்ளியின் வளர்ச்சிக்கு அன்றிலிருந்து இன்றுவரை பங்களித்துவரும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குறியவர்கள், நினைவு கூறுவதற்கு தகுதி படைத்தவர்கள். நாமும் இது போன்ற புனித பணிகளில் பார்வையாளர்களாக இல்லாமல் பங்காளர்களாக மாறுவோம். நம்மால் முடிந்த முயற்சிகளை அல்லாஹ்வின் திருப்பொறுத்தத்தை எதிர்பார்த்து முன்னெடுப்போம்.
இதில் ஏதேனும் தவகல் அல்லது யார் பெயரேனும் விடு பட்டு இருந்தால் தெரிவிக்கலாம் சேர்த்துக் கொள்ளபடும். e-mail .anwar.raja@hotmail.com
By
D. Anwar Raja
sahab pvs
No comments:
Post a Comment