அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 16 September 2024

தினமும் அதிகாலையில்

தினமும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள், பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறி மதீனாவின் எல்லையில் இருக்கும் ஒரு குடிசை வீட்டுக்குச் செல்வதையும் சற்று நேரத்திற்குப்  பின்னர் அங்கிருந்து வெளியேறுவதையும் உமர் (ரலி) கவனித்தார்.

அபூபக்கர் (ரலி) எனென்ன நல்ல காரியங்கள் செய்கிறார் என்பது பெரும்பாலும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியும். ஆயினும் இந்த விஷயம் மட்டும் தெரியவில்லை.

நாட்கள் நகர்ந்தன. கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களோ தொடர்ந்து அந்த குடிசை வீட்டுக்குச் சென்று கொண்டே இருந்தார். அங்கு சென்று அவர் என்ன செய்வார் என்பதும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாமலே இருந்தது.

ஒருநாள்….
அபூபக்கர் (ரலி) வெளியே சென்ற பின்னர், அந்த குடிசைக்குச் சென்று என்ன நடக்கிறது என்பதை பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் உமர் (ரலி).

குடிசைக்குள் நுழைந்தார்… வயதான பார்வையற்ற நடக்க இயலாத ஒரு மூதாட்டி இருப்பதைக் கண்டார். 

பின்னர் குடிசையைக் கவனித்தார். கண்ட காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கண் தெரியாத இந்த மூதாட்டி அபூபக்கர் (ரலி) அவர்களின் உறவினராக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவரிடம் உமர் (ரலி) கேட்டார்:

"தினமும் ஒருவர் இங்கே வருகிறாரே அவர் இங்கு வந்து என்ன செய்வார்?”

மூதாட்டி: "அருமை மகனே, அல்லாஹ்வின் மீது ஆணை! அவரைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தினமும் காலையிலேயே இங்கு வருவார். வீட்டைத் துடைத்து சுத்தம் செய்வார். 
ஆட்டிலிருந்து பால் கறப்பார். எனக்கு உணவு சமைத்துத் தருவார். பின்னர் எதுவும் பேசாமல் திரும்பிவிடுவார்”.

அது கேட்ட உமர் (ரலி) குலுங்கிக் குலுங்கி அழுதவராக வீட்டைவிட்டு உடனே வெளியேறிவிட்டார்.

அபூபக்கர் (ரலி) மரணித்த பின்னர், அந்த மூதாட்டிக்கு பணிவிடை செய்யவேண்டும் என்றும் அபூபக்கர் (ரலி) மரணமடைந்த செய்தியை அந்த மூதாட்டிக்குத் தெரிவிக்க வேண்டாம் என்றும் உமர் (ரலி) தீர்மானித்தார்.

அந்த குடிசைக்குச் சென்றார். முதல் நாளே அந்த மூதாட்டி கேட்டார்:

"உமது நண்பர் மரணித்துவிட்டாரோ…?”

உமர் (ரலி) திடுக்கிட்டார். திகைப்புடன் கேட்டார்: "உங்களுக்கு எப்படி அது தெரிந்தது?”

மூதாட்டி: நீர் எனக்கு உண்ணத் தரும் பேரீத்தப் பழத்தை விதை நீக்காமல் தருகிறீர். உமது தோழர் விதை நீக்கித் தருவார்”.

நடுங்கத் துவங்கிவிட்டார் உமர் (ரலி).
நிற்க முடியாமல் தரையில் அமர்ந்தார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

அப்போதுதான் அந்தப் புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார் உமர் (ரலி):

"உமக்குப் பின்னர் வரவிருக்கும் கலீஃபாக்களுக்குப் பெரும் சுமையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டீரே அபூபக்கரே…!”

இப்போது நாம்… 

அபூபக்கர் (ரலி) அவர்களுக்காக அழுவதா…?

உமர் (ரலி) அவர்களுக்காக அழுவதா..?

அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகன்று கொண்டிருக்கும் நல்ல பண்பாடுகளுக்காக அழுவதா…? தெரியவில்லை.

மரணிக்கு முன் நல்ல சுவடுகளை விட்டுச் செல்வோம். ஏனெனில் நாம் விட்டுச் செல்லும் சுவடுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.

"அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் நாம் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்” 
(36:12)

Copied

Wednesday 11 September 2024

புதுவலசை அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி 11 குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் மண்டபம் வட்டார அளவில் அதிக குழு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

[9/11, 3:03 PM] +91 97873 09267: புதுவலசை அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி 11 குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் மண்டபம் வட்டார அளவில் அதிக குழு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது
[9/11, 3:03 PM] +91 97873 09267: தடகளப் போட்டிகளில் மாணவர்கள் பிரிவில் 6 பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்
[9/11, 3:03 PM] +91 97873 09267: மாணவிகள் பிரிவில் தடகளப் போட்டியில் 55 புள்ளிகள் பெற்று உயர்நிலைப் பள்ளி அளவில் முதலிடமும் வட்டார அளவில் இரண்டாம் இடமும் பெற்று சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
[9/11, 3:03 PM] +91 97873 09267: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஹாக்கி போட்டியில் நமது பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பெற்று 34,000ரூபாய் பரிசுத் தொகை பெற்று சாதனை படைத்துள்ளனர் மாணவர்கள் நீச்சல் பிரிவில் 5 பதக்கங்கள் பெற்று 8000 ரூபாய் பரிசுத் தொகை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்
[9/11, 3:03 PM] +91 97873 09267: இன்று C M  டிராஃபில்  நம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மாவட்டஆட்சித் தலைவர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

Friday 6 September 2024

நமது மழலையர் பள்ளியின் மேல் சென்ற மின் பாதையினால் கடந்த வருடம் அங்கிகாரம் ரம் தர வட்டாச்சியர் மறுத்துவிட்ட நிலையில் நமதூர் திமுக கிளையின் சார்பில் திமுக மாவட்ட செயலாளரும் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் உயர் திரு காதர் பாட்சா முத்து ராமலிங்கம் அவர்கட்கு தகவல் தெரிவிக்கபட்டு தற்காலிக அங்கீகாரம் வழங்கினர்.(6 மாதத்தில் சரி செய்து விடுகிறோம் என்ற உறுதியளிப்பின் பேரில் ) இன்று அப்பணியை செய்து உதவிய மரியாதைக்குறிய செயற்பொறியாள ருக்கும் இதர மின் வாரிய ஊழியர்கட்கும் ஜமாத் சார்பிலும் திமுக புதுவலசை கிளை சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். விரைவில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பணிவாக தொங்கி கொண்டிருக்கும் மின் பாதையில் கூடுதல் மின் கம்பம் அமைத்து தர ஆவண செய்யும் படி கோரிக்கை வைக்கிறோம். நன்றி

சஹாப் அப்பாக்குட்டி