அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 23 December 2025

EPA டாக்டர் அகமது ஃபர்தான் ஜாபிர் ஹுசைனை கௌரவிக்கிறது*எமிரேட்ஸ் புதுவலசை சங்கம் (EPA), ஸ்வீடனின் கோதன்பர்க்கில் உள்ள சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலிருந்து *டாக்டர் ஆஃப் பிலாசபி (பிஎச்டி) இன் அட்டிவ் மேனுஃபேக்ச்சரிங் ஆஃப் சூப்பர் அலாய்ஸ்* பட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக டாக்டர் அகமது ஃபர்தான் ஜாபிர் ஹுசைனுக்கு கௌரவச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை வழங்கி பெருமையுடன் கௌரவித்தது.

EPA டாக்டர் அகமது ஃபர்தான் ஜாபிர் ஹுசைனை கௌரவிக்கிறது*

எமிரேட்ஸ் புதுவலசை சங்கம் (EPA), ஸ்வீடனின் கோதன்பர்க்கில் உள்ள சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலிருந்து *டாக்டர் ஆஃப் பிலாசபி (பிஎச்டி) இன் அட்டிவ் மேனுஃபேக்ச்சரிங் ஆஃப் சூப்பர் அலாய்ஸ்* பட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக டாக்டர் அகமது ஃபர்தான் ஜாபிர் ஹுசைனுக்கு கௌரவச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை வழங்கி பெருமையுடன் கௌரவித்தது.

EPA உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகக் குழு முன்னிலையில் துபாயில் பாராட்டு விழா நடைபெற்றது. *இந்த சந்தர்ப்பத்தில், டாக்டர் அகமது ஃபர்தான் தனது கல்விப் பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு ஒரு சுருக்கமான மற்றும் ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார்.* இந்த பெருமைமிக்க மைல்கல்லில் ஒரு பகுதியாக இருப்பதற்கும், கல்வியில் சிறந்து விளங்க அவர்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் அவரது குடும்பத்தினரைப் பாராட்டவும், பாராட்டவும் EPA வாய்ப்பைப் பெற்றது.

*அவரது வார்த்தைகளும் அனுபவங்களும் புதுவலசை மாணவர்கள் மற்றும் இளம் நிபுணர்களை வலுவாக ஊக்குவித்தன, உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய வாய்ப்புகளை கவனம் மற்றும் உறுதியுடன் தொடர அவர்களைத் தூண்டின.*

டாக்டர் அகமது ஃபர்தான் ஜாபிர் ஹுசைனுக்கு EPA தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது, மேலும் அவரது கல்வி மற்றும் தொழில்முறை முயற்சிகளில் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறது.  அவரது சாதனை உலகளவில் புதுவலசை சமூகத்திற்கு மிகுந்த பெருமையைத் தருகிறது மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது.

வாழ்த்துக்கள்
எமிரேட்ஸ் புதுவலசை சங்கம்


சஹாப் A k

Monday, 22 December 2025

ஒரு ஊரின் வளர்ச்சி என்பது வெறும் கட்டிடங்களில் மட்டும் இல்லை

ஒரு ஊரின் வளர்ச்சி என்பது வெறும் கட்டிடங்களில் மட்டும் இல்லை. அந்த ஊர் இளைஞர்களின் விளையாட்டுத் திறனிலும் அடங்கியிருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது ஊரின் விளையாட்டு மைதானத்தின் நிலை, வருத்தத்திற்குரியது.

பழைய மைதானத்திலிருந்து புதிய மைதானம் என்பது வெறும் சாலையின் மறுபுறம் என்ற தூர மாற்றத்தை மட்டுமே கண்டுள்ளது. ஆனால், ஒரு மைதானத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தினமும் மக்கள் நடமாட்டத்தால் நிரம்பி வழிந்த ஒரு மைதானம், புதிய இடத்திற்குச் சென்ற பிறகு ஏன் தனது உயிரோட்டத்தை இழந்தது என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி.

விளையாட்டு மைதானம் என்பது வெறும் மண் தரை மட்டுமல்ல; அது வீரர்களையும், ரசிகர்களையும் பிணைக்கும் இடமாகும். 
மைதானத்தைச் சுற்றி நிழல் தரும் மரங்கள் இல்லாததால், 
பள்ளி விளையாட்டுப் போட்டிகளின் போது, மாணவர்களும் பொதுமக்களும் அமர இடமின்றி வெயிலில் நிற்கும் நிலை நீடிக்கிறது. இதனால் போட்டிகளைக் காண வரும் மக்களின் ஆர்வம் குறைகிறது.

தாழ்வான பகுதியாக இருப்பதால், பருவமழை காலங்களில் மைதானம் குளமாக மாறிவிடுகிறது. இதனைச் சீர் செய்யத் தவறியது ஒரு முதன்மைத் தடையாக இருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த மைதானம் அப்படியேதான் இருக்கிறது. முறையான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டமிடல் (Long-term Planning) இருந்திருந்தால், பகுதி பகுதியாகக்கூட இந்த மைதானத்தை மாற்றியிருக்க முடியும். மாநில அளவில் சாதனை படைக்கும் பள்ளி மாணவர்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம்  உள்ளூர் இளைஞர் அணிகள் எனப் பலரும் ஊருக்குப் பெருமை சேர்த்து வரும் வேளையில், ஒரு சிறந்த மைதானம் தேவையானதாக இருக்கிறது. 

வெறும் மைதானம் அல்ல, அது ஒரு வாழ்வியல் தளம்!
நமது மைதானத்தை வெறும் விளையாட்டுத் திடலாக மட்டும் பார்க்காமல், ஒரு 'மல்டி-பர்ப்பஸ்' (Multi-purpose) இடமாக மாற்ற வேண்டும்.

முதியவர்களும் பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் மைதானத்தைச் சுற்றி நடைபயிற்சி பாதை (Walking Track) அமைக்கப்பட வேண்டும்.
பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளைக் காணத் திண்டுகள் மற்றும் நிழற்கூரைகள் அமைக்கப்பட வேண்டும்.

இது சாத்தியமாகுமா?
நிச்சயமாகச் சாத்தியம்! நம்மிடம் திறமையான இளைஞர்களும், நவீனச் சிந்தனை கொண்ட சகோதரர்களும் இருக்கிறார்கள். அவர்களது கிரியேட்டிவ் யோசனைகளையும், அரசின் திட்டங்களையும் இணைத்தால் இந்த மைதானத்தை ஒரு முன்மாதிரி மைதானமாக மாற்ற முடியும்.
இதற்குத் தேவை முறையான திட்டமிடலும், ஊர் மக்களின் கூட்டு முயற்சியுமே. இன்னும் காலம் தாழ்த்தாமல், நமது விளையாட்டு மைதானத்திற்குப் புத்துயிர் ஊட்ட முயற்ச்சி செய்ய வேண்டும்.

"பள்ளிகளின் தாளாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள Dr. சாதிக் அலி அவர்களுக்கு வாழ்த்துகள்.

பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தாங்கள் அளித்த முக்கியத்துவத்தைப் போலவே, இந்த விளையாட்டு மைதானமும் ஒரு முன்மாதிரி மைதானமாக மாறவேண்டும். ஜமாஅத், சங்கம் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்களின் அமைப்புகளும்  ஒருங்கிணைந்து மேம்படுத்துவது அவசியமாகும்."

"மைதான வடிவமைப்பிற்கான மாதிரிப் படங்கள் (AI மூலம் உருவாக்கப்பட்டவை) கீழே உள்ளன. நமது ஊர் இளைஞர்களின் மேலான படைப்பாற்றல் மற்றும் ஐடியாக்கள் மூலம் இதை இன்னும் சிறப்பாக வடிவமைக்க முடியும்." 

*வாலிபால் மைதானம் அமைக்க வேண்டிய இடம்.*

*பொதுமக்களின் நடை பயிற்சி பாதை.*

Thursday, 18 December 2025

#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடிமாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் திரு. Udhayanidhi Stalin அவர்கள் ஆணைக்கிணங்கமாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் அறிவுறுத்தலின்படி திருவாடானை சட்டமன்றத் தொகுதி மண்டபம் மத்திய ஒன்றியம் கழகத்தின் சார்பாக எனது தலைமையில். புதுவலசை ஊராட்சி கிளை கழக செயலாளர் மற்றும் பாக முகவர்கள் (BLA 2) அவர்கள் முன்னிலையில்இன்று புதுவலசை ஊராட்சி பாகம் எண்: 308,309 "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தேர்தல் பரப்புரை கோசத்துடன் தொடங்கி தெருமுனை பிரச்சாரம் மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகளுடன், கழக இளைஞர்கள், வீடு தோறும் சென்று திராவிட மாடல் கழக அரசின் சாதனைகளையும் நலதிட்டங்களையும் மக்களிடம் எடுத்துக் கூறியும் துண்டு பிரசுருங்கள் கொடுத்தும் பொதுமக்களிடம் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எடுக்கப்படும் யுக்திகள் குறித்தும்ஆலோசிக்கப்பட்டது இந்நிகழ்வில் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழகச் செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக மூத்த முன்னோடிகள், பாக முகவர்கள் (BLA2), பூத் கமிட்டி உறுப்பினர்கள் (BLC),BDA, இளைஞர்கள், மகளிர் அணியினர், உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் #KatharbatchaMLA #திருவாடனை_சட்டமன்ற_தொகுதி #என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி #dmkyuthwing #CMMKStalin #RamanathapuramDMK #DMKITWING #DMK4TN #கழகத்தலைவர்#வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வரலாறு #மண்டபம்_மத்திய_ஒன்றிய_கழகம்🏴🚩