உர விலையை குறைக்காவிட்டால், பிரதமரை அடிப்பேன். மம்தா ஆவேசம்
22 January 2013
உரவிலையை குறைக்க
வலியுறுத்தி இது வரை 10 முறை பிரதமரை சந்தித்தும் எந்த பிரயோஜனமும்இல்லை.இனி
பிரதமரை சந்தித்தால் ரவுடியாக மாறி அவரை அடிக்க வேண்டும் என தோன்றுகிறது என மேற்கு
வங்க முதல்வர் மம்தா ஆவேசமாக பேசினார்.மத்திய அரசில் இருந்து கடந்த செப்டம்பர்
மாதம்விலகியது திரிணாமுல் காங். இதையடுத்து காங். கட்சியை விமர்சனம் செய்துவந்தார்
முதல்வர் மம்தா பானர்ஜி.
கோபக்காரியாக மாற்றிவிட்டார்
:
கானிங் நகரில் அவர் பேசியதாவது:
மத்திய அரசில் இருந்து விலகும் முன் சமையல் கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை, அன்னிய நேரடி
முதலீடு ,உரவிலை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நான் 10-க்கும் மேற்பட்ட முறை
சந்தித்து வலியுறுத்தினேன். பின்னர் டில்லியில் எனது கட்சி எம்.பி.க்களுடன்
ஆர்ப்பாட்டமும் நடத்தினேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நான் ரௌடியாக
மாறி அடிக்க வேண்டும்.
அந்த அளவிற்கு என்னை கோபக்காரியாக மாற்றிவிட்டார்
பிரதமர் மன்மோகன்சிங். இனி மேற்குவங்க மக்களுக்காக டில்லி வீதிகளில் தொடர்
போராட்டம் நடத்தப்போகிறேன். தற்போது மாநிலத்தில்தேர்தல் வாக்குறுதியை திரிணாமுல்
காங். அரசு முடிந்தவரை நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு மம்தா பானர்ஜி
பேசினார்.
No comments:
Post a Comment