அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 21 January 2013

மீண்டும் ஒரு குழந்தை !



மீண்டும் ஒரு குழந்தை !

கோலாலம்பூர், ஜனவரி 21- கடந்த புதன் கிழமையன்று காணாமல் போன 6 வயது சிறுவன் , William Yau Zhen Zong பற்றிய எந்த விவரமும் இன்னும் கிடைக்கப்படவில்லை. 

“வில்லிமை கண்டுபிடிப்பதற்காக சனிக்கிழமையன்று “NUR” இணைப்பு சேவை முடக்கிவிடப்பட்டது. அன்று முதல் நிறைய தொலைப்பேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும் அச்சிறுவன் இருக்குமிடம் குறித்த சரியான விவரம் எதுவும் கிடைக்கவில்லை” என்று சுபாங் ஜெயா காவல் துறை அதிகாரி OCPD Supt Tan Ah Chua தெரிவித்துள்ளார்.
” நான் குழந்தையை தனியாக காரில் விட்டுச் சென்றிருக்க கூடாது. நான் செய்தது மிகப் பெரிய குற்றம்தான். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். நல்லவர்கள் என் பையனை கண்டெடுத்து கூடிய சீக்கிரம் என்னிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று அச்சிறுவனின் தாயார் Goh Ying Ying கண்ணீர் மல்க பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மின்சார உபகரணத்தை வாங்குவதற்காக அவர்களுடைய மூன்று பிள்ளைகளை காரிலே விட்டுவிட்டு கடைக்கு சென்றிருந்த நேரம், அச்சிறுவன் காரை விட்டு இறங்கி காணாமல் போய் விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுவன் குறித்து விவரம் தெரிந்தோர் கீழ்கண்ட எண்களுடன் தொடர்புக் கொள்ளலாம் :
Goh Lai Than : 03-5631 9800 / 012-219 7133
Selangor Police Hotline : 03-2052 9999
இதற்கிடையில், பெற்றோர்கள் இந்த சம்பவத்தை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு, பிள்ளைகளின் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து எடுக்க வேண்டிய சில பாதுகாப்பு முறைகள் கீழ்வருமாறு :
எங்கு சென்றாலும் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் யாருடன் இருக்கிறார்கள்/பேசுகிறார்கள் என கண்காணித்துக் கொண்டே இருக்கவும்
பிள்ளைகளை தனியே வெளியே அனுப்புவதை தவிர்க்கவும், குறிப்பாக இரவில்.
குழந்தைகளுக்கு அவர்களுடைய முழ பெயர், வீட்டு முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணை சொல்லிக் கொடுக்கவும்.
பொம்மை கடைகளிலோ அல்லது புத்தகக் கடைகளிலோ பிள்ளைகளை தனியே விட்டுச் செல்வதை தவிர்க்கவும்.
பிள்ளைகளின் புகைப்படம் ஒன்றை எப்போதும் உடன் வைத்துக்  கொள்ளவும்.
கார் இயங்கிய நிலையில் பிள்ளைகளை உள்ளே விட்டுச் செல்வது ஆபத்தானது.
குழந்தைகள் கழிவறைக்குச் செல்லும் போது உடன் செல்லவும்.
பிள்ளைகளுக்கு கவர்ச்சியாகவோ அல்லது அதிக ஆபரணங்கள் அணிவித்தோ வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்வது அந்நியர்களின் கவனத்தை ஈர்க்கும். இது மிகவும் ஆபத்தானது.
பொது இடங்களுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் போது, ஒரு குறிப்பிட்ட இடத்தை காட்டி, பெரியவர்களிடமிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டால் அந்த இடத்திற்கு வந்து விடுமாறு அறிவுறுத்தவும்.
முக்கியமான வேலைகள் செய்யவிருக்கும் நேரத்தில் பிள்ளைகளை உடன் அழைத்துச் செல்வது கடினமாக இருப்பின், அவர்களை வேறு ஒரு நம்பகரமான நபரின் பாதுகாப்பில் ப்விட்டுச் செல்லவும்.
காணாமல் போய்விட்ட நிலையில் சீருடை அணிந்த காவல் அதிகாரிகள் அல்லது பிள்ளைகளுடன் இருக்கும் தாய்மார்களை அணுகி உதவி கேட்குமாறு பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுக்கவும்.
பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகளை அழைத்து வரும் போது தாமதமாக வருவதை தவிர்க்கவும் . அப்படி தாமதமாக வரும் நிலை ஏற்பட்டால், அந்நியர் வந்து கூப்பிட்டால் அவர்களுடன் செல்லக்கூடாது என்பதை நினைவுறுத்தவும்.
பெற்றோரிடமிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும்போது அந்த இடத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என்று பிள்ளைகளிடம் நினைவுறுத்தவும்.
அந்நியர்களிடம் அதிகம் பேச்சு கொடுக்க வேண்டாம் என்பதை பிள்ளைகளுக்கு நினைவிறுத்தவும்.
உறவினர்கள், குடும்ப நண்பர்களை அடையாளம் காண குறியீட்டு சொல் ஒன்றை பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுக்கவும். இது அந்நியர்கள் பிள்ளைகளை ஏமாற்றி அழைத்துச் செல்லும் சம்பவங்களை தடுக்கும்.



vanakkammalaysia. thanks

No comments:

Post a Comment