January 4,
2013 09:58 am
ஆந்திராவின் பிரபல சாமியார் மீது பாலியல் புகார்
எழுந்துள்ளது. சர்வதேச தியான மாநாடு என்ற பெயரில், மாநாட்டை நடத்தி, பெண்களை
கட்டி பிடித்தும்,
சில்மிஷம் செய்ததாகவும் சாமியார் மீது கூறப்படும் புகார்களை
விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிஜாமாபாத் அருகே உள்ள ஹன்சபள்ளி என்ற இடத்தில் பிரமாண்ட பிரமிட் அமைத்து, தியான
மையம் நடத்தி வருபவர்,
சுபாஷ் பத்ரி, 65. "பிரமிட்டின் உள்ளே அமர்ந்து தியானம் செய்தால், மன
அமைதி கிடைக்கும்,
தீர்க்க தரிசனம் பெறலாம்´ என்று, கூறி
வருகிறார், சுபாஷ்
பத்ரி.
கடந்த
டிசம்பர் 21 முதல், 31ம்
திகதி வரை, சர்வதேச
தியான மாநாட்டை,
பிரமிட்டில் கூட்டியிருந்தார் சுபாஷ் பத்ரி.
அதில், உலகின்
பல நாடுகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர். ஆந்திரா மட்டுமின்றி அண்டை
மாநிலங்களில் இருந்தும் வி.ஐ.பி.,கள்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், பெண்களை
கட்டி பிடித்து முத்தம் கொடுப்பதும், அவர்களுடன், "சில்மிஷம்´ செய்வதுமாக, சாமியார் பத்ரி, காம
செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதை
ரகசியமாக படம் பிடித்த ஒருவர், தெலுங்கு, "டிவி´ சேனல்களுக்கு அந்த காட்சிகளை கொடுத்து ஒளிபரப்ப செய்து விட்டார். அந்த
காட்சிகள், தெலுங்கு சேனல்கள் பலவற்றிலும் நேற்று முன்தினம் ஒளிபரப்பானது. இதனால்
அதிர்ச்சி அடைந்த, மகபூப்நகர் மாவட்ட கலெக்டர், கிரிஜா
சங்கர், சாமியாரின் செயல் பாடுகள்
குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், தியான
மாநாட்டில் பங்கேற்ற வி.ஐ.பி.,கள்
கலக்கம் அடைந்துள்ளனர்.
thamilan. thanks
No comments:
Post a Comment