January 31,
2013 03:46 pm
சட்ட
ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் கடமை. அதை தமிழக அரசு செய்து வருகிறது.
இந்தப் படம் 524 திரையரங்களில் திரையிட இருந்தது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இந்தப் படத்தை தடை செய்யக் கோரினர்.
அவர்கள்
பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்தப் படத்துக்கு அனுமதி அளித்திருந்தால்
பெருமளவில் வன்முறை வெடித்திருக்கக் கூடும்.
உளவுத்
துறை மூலம் கிடைத்தத் தகவல்படி, அனைத்து
திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு
உரிய பொலிஸார் எண்ணிக்கை இல்லை.
ஒவ்வொரு
திரையரங்குக்கும் தினமும் மூன்று வேளைக்கு தலா 60 பொலிஸார் தேவை. ஆனால், அதற்கு
உரிய எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடியாது.
மொத்த
பாதுகாப்புக்கு 56,440
பொலிஸார் தேவை. இது சாத்தியம் இல்லை. எனவே, சட்டம்
ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவே விஸ்வரூபம் படத்துக்குத் தடை விதிக்க வேண்டியதாகவிட்டது.
thamilan thanks
No comments:
Post a Comment