அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 26 January 2013

நெடுஞ்சாலையில் சங்கிலித் தொடர் போல விபத்து: பல மணி நேரம் போக்குவரத்து தடை

[ சனிக்கிழமை, 26 சனவரி 2013, 11:42.40 மு.ப GMT ]
தெற்கு ஓண்ட்டேரியாவின் நெடுஞ்சாலையான 401 இல் நேற்று பிற்பகலில் பனிப்பொழிவினால் சங்கிலித் தொடர்போல கார்கள் மோதிக் கொண்டன. இதனால் நியுட்டன் வில்லாவில் இருந்து நியுகேஸ்ல் வரை 10 கி.மீ தொலைவிற்கு போக்குவரத்து பல மணிநேரங்கள் தடைசெய்யப்பட்டது.
டொரொண்ட்டோவில் கிழக்கே 80 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த விபத்தில் அறுபது கார்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிக் கொண்டது என்று டர்ஹாம் காவல்துறை அதிகாரி ஸ்டீவ் மெக்னென்லி( Steve McNenly) தெரிவித்தார்.
இந்த விபத்தில் கார் கதவுகள் பெயர்ந்து விழுந்தன, பம்பா்கள் உடைத்து கிடந்தன, உள்ளே சிக்கியவர்களை, பொலிசார் உதவியுடன் மீட்டனர்.
இந்த கார்கள் மோதிக்கிடப்பதை முதலில் பார்த்த மருத்துவ உதவியாளர் மாட்வால்ட்டன்( Matt Walton) பொலிசாருக்குத் தகவல் கொடுத்தார்.
இவர் பார்த்தபோது 10, 15 கார்கள் பல்வேறு அளவுள்ள டிராக்டா்களுடன் மோதிக் கிடப்பதைப் பார்த்தாக தெரிவித்தார்.
ஐந்து பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனா்.
இருவர் நிலை உயிருக்கு ஆபத்தாக இருக்கிறது. அவர்களில் ஒருவரை சன்னிபுரூக் மெடிக்கல் செண்ட்டருக்கு கொண்டு சென்றனர்.
வானிலை மோசாமாக இருப்பதால் ஹெலிகப்டா் மூலமாக கொண்டு செல்ல இயலவில்லை.
எனவே டா்ஹாம், நார்த்தம்பா்லாண்ட, பீட்டர்பரோ, டொரொண்ட்டோ போன்ற ஊர்களில் இருந்து ஆம்புலன்ஸ் வான்கள் விபத்து நடந்த இடத்திற்கு வந்தது என்று தகவல் தொடர்பாளர் வானேஸா தாமஸ்(Vanessa Thomas) கூறினார்.

newsonews thanks

No comments:

Post a Comment