அயர்லாந்தில் பர்கர் உணவில்
குதிரை கறி வைத்து விற்கப்பட்ட சம்பவத்தை அடுத்து குதிரை கறி வினியோகஸ்தருக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்களில் பர்கரில் குதிரைக் கறி
வைத்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து அயர்லாந்து விவசாயத் துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், அங்குள்ள
பர்கர் தயாரிப்பு மையங்களில் கால்நடை மருத்துவர்கள் சோதனை நடத்தினர்.
சோதனையில், பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டெஸ்கோ நிறுவனம் தான்
குதிரை கறி அடங்கிய பர்கர்களை விற்பனைக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் தற்போது குதிரை கறி பர்கர்களை வினியோகித்த “சில்வர் கிரஸ்ட்” என்ற
நிறுவனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெஸ்கோ நிறுவன தொழில்நுட்ப இயக்குனர் டிம் ஸ்மித் குறிப்பிடுகையில்,
வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு என்பது மிக முக்கியம்.
இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் நிகழாமல் தடுக்க, கறி உணவுகளில் டி.என்.ஏ
பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும் எங்கள் நிறுவனத்திற்கு குதிரை கறியை
வினியோகித்த சில்வர் கிரஸ்ட் நிறுவன சேவையை ரத்து செய்து விட்டோம் என்றார்.
No comments:
Post a Comment