கடலுக்கு அடியில் இருந்து சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை
இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இந்தியா தனது பாதுகாப்பை பலப்படுத்தும்
வகையில் பல்வேறு வகையிலான ஏவுகணைகளை உள்நாட்டில் உருவாக்கி சோதித்து வருகிறது. இந்த
வகையில், ஐதராபாத் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு கடலில் இருந்து
ஏவப்பட்டு ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கக்கூடிய பி.ஓ.5 என்ற
ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணையை நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவி,
எதிரியின் இலக்கை அழிக்கும் ஆற்றல் வாய்ந்ததாகும்.
இந்த ஏவுகணை, வங்காள
விரிகுடாக் கடலில் அமைக்கப்பட்ட ஒரு தளத்தில் இருந்து நேற்று ஏவி சோதிக்கப்பட்டது.
ஆனால் எந்த இடம் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்த ஏவுகணை உரிய இலக்கை வெற்றிகரமாக
தாக்கியது. இதனால் கே-5 ஏவுகணை சோதனை அனைத்து மட்டத்திலும் வெற்றி அடைந்துள்ளது.
இதுகுறித்து டி.ஆர்.டி.ஓ. தலைவர் சரஸ்வத் கூறுகையில், மத்திய தர பி.ஓ.5 ஏவுகணை
சோதனை, கடலுக்கு அடியிலிருந்து ஏவி நடத்தப்பட்டது.
இந்தியா தரையிலிருந்தும்,
விண்ணிலிருந்தும் அணு ஏவுகணைகளை ஏவுகிற வல்லமை பெற்றுள்ளது. இந்த நிலையில்,
கடலுக்கு அடியிலிருந்தும் அணு ஏவுகணையை செலுத்தும் ஆற்றலையும் இனி பெற்று விடும் என
வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்தியா கடலுக்கு அடியில் இருந்து ஏவக்கூடிய மேலும்
இரண்டு ஏவுகணைகளை தற்போது உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்கா,
பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய குறிப்பிட்ட நாடுகள்தான் கடலுக்கு அடியில் இருந்து
ஏவுகணைகளை செலுத்துகிற வசதியைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment