அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 20 February 2013

பாகிஸ்தானில் போராளி முகாம்கள் மீது போர் விமானம் குண்டுமழை : 29 பேர் பலி

[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 
பாகிஸ்தானில் வாழும் ஷியா பிரிவினரை குறிவைத்து பல இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி குவெட்டா நகரில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் 92 ஷியா இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். இம்மாதம் 16ம் தேதி குவெட்டாவில் உள்ள ஹசாரா பகுதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 89 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 200 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாகிஸ்தானில் போராட்டம் நடத்தினார்கள்.
இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. விசாரணை நடத்தியதில், குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியின் அடியில் சுமார் 800 கிலோ வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த தீவிரவாதிகள், இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக தெரியவந்தது.
இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான தீவிரவாதிகளை குறிவைத்து 36 மணி நேரத்திற்குள் வேட்டையாட பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கைபர் மாகாணத்தின் டவாதோய் பகுதியில் உள்ள 4 போராளி முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படையின் ஜெட் விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன. இந்த தாக்குதலில் அப்பகுதியில் ரகசியமாக இயங்கி வந்த முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. 20 போராளிகள் உடல் சிதறி பலியாகினர்.
இதேபோல், ஆரக்சாய் மாகாணத்தில் உள்ள அர்கன்ஜு, சபர்சோக், டன்போ ஆகிய பகுதிகளில் உள்ள போராளிகளின் பதுங்குமிடங்கள் மீதும் ஜெட் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. இந்த தாக்குதலில் 9 போராளிகள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
.newsonews. thanks

No comments:

Post a Comment