- March 2013
மலேசியாவின்
சாபா மாகாணத்தில் கடந்த 20 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பிலிப்பீனோ
சுல்தானின் ஆதரவாளர்களுக்கும்மலேசிய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று நடைபெற்ற மோதலில் இரு பாதுகாப்புப் படையினரும் 12 பிலிப்பீனோ மக்களும் கொல்லப் பட்டுள்ளனர். இத் தகவலை சாபா மாகாண போலிஸ் கமிசனர் ஹம்சா டாயிப் உறுதி செய்துள்ளார்.
தற்போது குறிப்பிட்ட இடத்தில் 100 இற்கும் அதிகமான போலிசார் குவிக்கப் பட்டுள்ளனர். மேலும் கலவரத்தை அடக்கும் பணி இன்னமும் தொடர்கின்றது. இவ்வன்முறையில் காயமடைந்த மக்களின் தொகை தெரியப் படுத்தப் படவில்லை.
போர்னியோ தீவில் உள்ள சாபா மாகாணத்தில் தெற்கு பிலிப்பைன்ஸில் இருந்து வந்து குடியேறிய சுலு சுல்தானின் 200 ஆதரவாளர்கள் கடற்கரையோர கிராமமான லஹாட் டாட்டு இனை தமது பிரதேசமாக 1800 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆவணங்களைக் காட்டி சொந்தம் கொண்டாடடினர். இதனையடுத்தே சமீபத்தில் இந்த கலவரம் வெடித்துள்ளது.
74 வயதாகும் சுலு சுல்தான் ஆகிய ஜமாலுல் கிரம் III முன்பு போர்னியோ தீவின் சில பகுதிகளையும் தெற்கு பிலிப்பைன்ஸ் தீவுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது
.4tamilmedia thanks
No comments:
Post a Comment