அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 16 March 2013

ஹாங்காங்: வயதான தம்பதிகளில் தலைகளை வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கொடூரம்

[ ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013, 
சீனாவின் நிர்வாக நகரமான ஹாங் காங்கின் தாய் கோக் சூயி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த சாவோ விங்-கி மற்றும் அவரது மனைவி சியு யுவெட்-யீ ஆகிய இருவரையும் கடந்த சில நாட்களாக காணவில்லை.இந்நிலையில் போலீசார் நேற்று நடத்திய சோதனையில், அந்த வயது முதிர்ந்த தம்பதியரின் தலைகள் அவர்களின் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்தது தெரியவந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட இருந்த அந்த தலைகளை பொலீஸார் கைப்பற்றினர். மேலும் அங்கு பதிவான தடயங்களும் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து நடத்திய சோதனையில், குடியிருப்பின் மற்ற பகுதிகளில் அந்த தம்பதியரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களை கொலை செய்ய பயன்படுத்திய கத்திகளும் கைப்பற்றப்பட்டன. உடலின் ஒரு சில பாகங்களைக் காணவில்லை.

நெஞ்சை பதற வைக்கும் இந்த கொடூர கொலை தொடர்பாக பொலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்த தம்பதியரின் 29 வயது மகன் மற்றும், 35 வயதான மற்றொரு நபரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


newsonews. thanks

No comments:

Post a Comment