அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 23 March 2013

மாலி தீவிரவாத இயக்கத்தின் கமாண்டர் அபூ ஜீத் சுட்டுக்கொலை!


மாலி தீவிரவாத இயக்கத்தின் கமாண்டர் அபூ ஜீத் சுட்டுக்கொலை!

March 24, 2013  08:42 am

ஆப்பிரிக்க நாடான மாலியில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நடைமுறை படுத்தக்கோரி இஸ்லாமிக் மிக்ரெப் என்ற இயக்கம் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய இந்த இயக்கம் நாட்டின் வடக்கு பகுதியில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தெற்கு நோக்கி முன்னேறி வந்தது.

இந்நிலையில் பிரான்சு அரசு, மாலி இராணுவத்தினருக்கு ஆதரவாக அங்கு சண்டையிட்டது. இதனால் தீவிரவாதிகள் அனைவரும் இஃபோகாஸ் மலைப்பகுதிக்கு விரட்டப்பட்டனர்.

பின்னர் சாட் நாட்டு இராணுவத்தினரின் துணையுடன் பிரான்ஸ் இராணுவம் அந்த தீவிரவாதிகளுக்கு எதிராக அங்கு தீவிர சண்டையில் இறங்கியது.

அப்போது சாட் இராணுவத்தினரிடம், நடந்த சண்டையில் அப்துல்ஹமீத் அபூ ஜீத் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த தகவலை தற்போது பிரான்ஸ் ஜனாபதிபதி ஒலாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.

அல்ஜீரியா நாட்டை சேர்ந்த கமாண்டர் அபூ ஜீத், பல மேற்கத்தியர்களை கடத்தி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்று கூறப்படுகிறது

thamilan. thanks

No comments:

Post a Comment