அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 18 March 2013

சென்னை சென்ட்ரலில் புத்த பிக்குக்கு அடி உதை! (காணொளி)


சென்னை சென்ட்ரலில் புத்த பிக்குக்கு அடி உதை! (காணொளி)சென்னை: சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இலங்கையை சேர்ந்த புத்த பிக்கு ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப் பட்டுள்ளனர்.

நேற்று காலை டெல்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இலங்கை கண்டியை சேர்ந்த டபிள்யூ எம்.கே.பண்டாரா என்ற புத்தபிக்கு தலைமையில் பெண்கள் உட்பட 19 புத்த பிக்குகள் வந்திறங்கினர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் "தமிழர்களை கொன்ற பாவிகளே" என்று கூறியவாறு அவர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். இந்த தாக்குதலில் ஒரு புத்த பிக்கு பெரிதும் நிலைகுலைந்து போனார்.
இந்த நிலையில் புத்த பிக்குகளுடன் சுற்றுலா வந்த பிற இலங்கை தமிழர்கள் அவரை தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து மீட்டனர். பின்பு பாதிக்கப் பட்டவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து விட்டு சென்னை திரும்பியதாகவும், இந்த நேரத்தில்  எதிர்பாராத தாக்குதல் நடந்துவிட்டதாகவும், ரூ.40 ஆயிரம் காணாமல் போய் விட்டதாகவும் பயணிகள் கூறினர்.
பின்னர், 19 பேரையும் ரயில்வே காவல்துறை அதிகாரி சேகர் தலைமையில், அவர்களை அழைத்துச் சென்று எழும்பூர் கென்னட் லேனில் உள்ள மகா போதி பவுத்த மடத்தில் பாதுகாப்பாக விட்டுவிட்டு வந்தனர்.
ஏற்கனவே தஞ்சை பெரிய கோவிலில் புத்த பிக்குகள் மீது இலங்கை தமிழர்கள் ஆதவராளர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத் தக்கது.
காணொளி

காணொளி நன்றி: சன் நியூஸ் தொலைக்காட்சி

.inneram thanks

No comments:

Post a Comment