அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 17 March 2013

கடல் விமானத்தை அறிமுகப்படுத்துகிறது கேரளா

 மார்ச் 2013, 
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கேரளாவில் கடல் விமானம்(SEA PLANE) திட்டத்தை அடுத்த மாதம் செயல்படுத்த மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
தண்ணீரில் இருந்து வானில் பறக்கவும் வானில் இருந்து தண்ணீரிலோ, நிலத்திலோ இறங்கும் வசதி கொண்டவை கடல் விமானங்கள்.
அமெரிக்கா, ஜப்பான், சீனா, அவுஸ்திரேலியா, கனடா, மாலை தீவுகள் போன்ற சில நாடுகளில் இத்தகைய கடல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்தியாவில் அந்தமான் நிகோபார் தீவுகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்த கடல் விமான திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்தது.
இதற்காக அனுமதி கோரி, மத்திய அரசுக்கு விண்ணப்பித்தது. தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால் அடுத்த மாதம் இந்த திட்டத்தை மாநிலத்தில் அறிமுகப்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.
முதல் கட்டமாக, மாநிலத்தின் முக்கிய விமான நிலையங்களான திருவனந்தபுரம், கொச்சி மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்களை சுற்றுலா தலங்களான, குமரகம், ஆலப்புழா, புன்னமடா, அஷ்டமுடி, மூணாறு போன்ற 22 இடங்களுடன் இணைக்கும் வகையில் கடல் விமான திட்டம் அமல்படுத்தப்படும்.
இந்த கடல் விமானத்தில் 10 பேர் பயணிக்கலாம். இந்த ரக கடல் விமான சேவையை நடத்த பவன்ஹன்ஸ், விங்ஸ் ஏர்வேஸ், பாரத் ஏவியேஷன், டர்போ ஏர் காப்டர்ஸ் போன்ற பல நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இத்தகவலை, கேரள சுற்றுலா தகவல் மைய அலுவலர் அனில் தெரிவித்துள்ளார்.


newindianews thanks

No comments:

Post a Comment