அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 21 April 2013

சீனாவில் நிலநடுக்க பலி எண்ணிக்கை 195 ஆக உயர்வு: 10500 பேர் காயம்

[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 
சீனாவில் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சவான் மாகாணத்தில் யாயன் நகருக்கு அருகே நேற்று காலை ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்க அதிர்வுகளால் யாயன் நகரமும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் சுமார் 20 வினாடிகள் குலுங்கின.
இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் பல மாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தொழிற் சாலைகளில் பணியில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கிக் கொண்டனர். இத்தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். ஆனால் சாலைகளை வழிமறித்து கட்டிட இடிபாடுகள் கிடந்ததால் அவர்களால் விரைவாக அந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை.
எனவே பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்துள்ளனர். தொடக்கத்தில் 156 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அகற்றப்பட்ட இடிபாடுகளில் இருந்து மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் இதன் பலி எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக காயம் அடைந்த 6 ஆயிரம் பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இடிபாடுகளில் சிக்கி கிடந்த பலர் மீட்கப்பட்டுள்ளதால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் 10,500 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே நிலநடுக்கம் நிகழ்ந்த பகுதிக்கு பிரதமர் லீ கெகுயாஸ்(Lee kekuyas) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
newsonews thanks

No comments:

Post a Comment