அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 26 April 2013

ஹஜ் பயணம் - 2701 பேர் குலுக்கல் முறையில் தேர்வு!



ஹஜ்  பயணம் - 2701 பேர் குலுக்கல் முறையில் தேர்வு!
சென்னை: தமிழ் நாட்டிலிருந்து இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள்  ஹஜ் கமிட்டி  மூலம்  2, 701 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மேலும் 936 பேர் சிறப்பு தகுதியில் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கான குலுக்கல் 23.04.2013 செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னை இராயப்பேட்டை புதுக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆணைக்கார்அப்துல் சுக்கூர் கலையரங் கில் நடைபெற்றது.
இந்த ஆண்டு தமிழகத்திற்கு 3,637 இடங்கள் ஒதுக்கீடாக கிடைத்துள்ளன. இதில் இந்திய ஹஜ் குழுவின் வழிகாட்டுதலின் படி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயணியுடன் ஒரு துணை பயணி என்னும் வகையில் 380 பயணிகள் மற்றும் 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் மூன்று முறை தொடர்ச்சியாக விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாமல் இந்த ஆண்டு விண்ணப்பித்த 556 பயணிகள் ஆக மொத்தம் 936 பயணிகள் சிறப்பு வகையின் கீழ் குலுக்கல் இன்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் குலுக்கல் மூலம் 2,701 புனித பயணிகள் மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த பட்டியலும் காத்திருப்போர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சரும் தமிழக ஹஜ் கமிட்டித் தலைவருமான ஆ. முஹம்மது ஜான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை முதன்மை செயலாளர் முனைவர் க. அருள்மொழி, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயலாளர் முஹம்மது நஸீமுத்தீன், தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைமை அலுவலர் முஹம்மது ராசிக், புதுக்கல்லூரி முதல்வர் முஹம்மது மாலிக், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டடனர் .
இவ்வருடம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஹஜ் பயணத்திற்காக 7 குழந்தைகள் உட்பட 11,411 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

inneram thanks

No comments:

Post a Comment