அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 26 April 2013

பூமிக்கு அருகே வருகிறது சனிக் கிரகம்!


பூமிக்கு அருகே வருகிறது சனிக் கிரகம்!


April 27, 2013  09:23 am
பூமிக்கு அருகில், சனிக்கோள் வர உள்ளது. இந்நிகழ்வு, ஏப்.28 நிகழ உள்ளது. சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம்,சனிக்கோள். சூரியனுக்கு அருகில், சனிக்கோள் வரும் போது, அதை பார்க்க முடியும். வரும், 28ம் திகதி, சூரியனுக்கு எதிராக சனிக்கோள் வருகிறது.


சாதாரணமாக, பூமி, சனி இடையே உள்ள தூரம், 142.7 கோடி கி.மீட்டர். சில நேரங்களில், சனிக்கோள், பூமியிலிருந்து, 125 கோடி கி.மீட்டர் தூரத்திற்கு வரும். தற்போது, சூரியனுக்கு எதிராக, சனிக்கோள் வருகிற நேரத்தில், பூமியில் இருந்து, 132.2 கோடி கி.மீட்டர் தூரத்தில் இருக்கும். இந்த நிகழ்வின் போது, சனிக்கோள், அதன் துணை கோள்கள் மற்றும் சனிக்கோளின் வளைவுகளை பார்க்க முடியும். 

கடந்த ஆண்டு, ஏப்.4ம் திகதி, அதுபோல், சனிக்கோள் பூமிக்கு அருகில் வந்தது.வரும், 28ம் தேதி முதல், 12 நாள்கள் இந்த நிகழ்வு தொடரும். வெறும் கண்ணால் இந்நிகழ்வை பார்க்கலாம். ஆனால், பிரகாசமான பொருளாக தான் சனிக்கோள் தெரியும். சனிக்கோளின் உட்கூறுகள் போன்றவற்றை, தொலைநோக்கியில் தான் பார்க்க முடியும். இது போன்ற நிகழ்வு, மீண்டும், 2014, மே, 10ம் தேதி, நடைபெற உள்ளது. சனிக்கோள், பூமிக்கு அருகில் வருவதால், எந்தவித பாதிப்பும் கிடையாது.

/thamilan. thanks

No comments:

Post a Comment