April 28,
2013 03:02 pm
தென் கிழக்காசியப் பகுதியில் அமைந்துள்ள மலேசியாவை
பிரிட்டிஷார் ஆண்டுவந்த போது இந்தியா, இலங்கையிலிருந்து தமிழர்கள் பெரும்பான்மையாக
அங்கு குடியமர்த்தப்பட்டனர்.
பரம்பரை
பரம்பரையாக அங்கு வாழ்ந்து வரும் அவர்களின் எண்ணிக்கை இன்று சுமார் 10 இலட்சமாக
உள்ளது.
வரும்
மே மாதம் 5-ம் திகதி மலேசிய பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 222
பாராளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ள மலேசியா பாராளுமன்றத்தில் 60 எம்பிக்களை
தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் விளங்குகிறார்கள்.
இந்தநிலையில் அங்குள்ள 30 சதவிகித தமிழர்களின் வாக்குகளை
குறிவைத்து ஆளும் கட்சியினர் மற்றும் எதிர் கட்சியினர் தீவிர தேர்தல்
பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழை
ஒரு ஆட்சி மொழியாக கொண்டுள்ள அங்கு வாக்காளர்களை கவர முதன்முதலாக தமிழ் மொழியில்
அச்சிடப்பட்ட துண்டுபிரசுரங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
மேலும்
தமிழ் பாடல்கள்,
நாடகங்கள் மற்றும் இணையத்தள வீடியோக்களையும் அவர்கள்
வெளியீட்டு வருகின்றனர். தமிழர்களுக்கு பெரும் ஆதரவாகவுள்ள உள்ள ஆளும் ஐக்கிய மலாய்
தேசிய அமைப்பு கட்சிக்கே,
இந்த முறையும் தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்று
சொல்லப்படுகிறது
/thamilan thanks
No comments:
Post a Comment