April 2013 22:54

இத்தனை ஆண்டுகால ஆட்சியில் பாஜக கர்நாடகாவின் செழிப்பை சீரழித்து விட்டது. விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள் என்று ராகுல்காந்தி, கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகாலமாகவே கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரவிருக்கும் மே 5ம் திகதி கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்லில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மட்டுமல்லாமல், எடியூரப்பாவின் புதிய கட்சியான கர்நாடக ஜனதாவும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது
.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, இன்று எரச்சூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். எப்படியாவது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வந்தே தீர வேண்டும் என்கிற முனைப்புடன் மிக சுறுசுறுப்பாக அவரது பிரச்சாரம் இருப்பதாக காங்கிரஸ் அல்லாதவர்கள் கூட கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இத்தனை வருட பாஜக ஆட்சியில் கர்நாடகத்தின் செழுமை சீரழிந்ததுதான் மிச்சம் என்றும், விவசாயிகள் வறட்சிக்கான மாற்றுவழி இன்றி திணறி வருகிறார்கள் என்றும் பேசியுள்ள ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தினமும் 8 மணிநேரம் மின்சாரம் தடையின்றி கிடைக்க வழிவகை செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
news4tamilmedia thanks
No comments:
Post a Comment