அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 29 April 2013

மனைவி தலைமுடியை வெட்டி, வீட்டில் அடைத்து சித்ரவதை


மனைவி தலைமுடியை வெட்டி, வீட்டில் அடைத்து சித்ரவதை


April 29, 2013  12:09 pm
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தளி ஹட்கோவை சேர்ந்தவர் சரவணன், வயது-28. தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இவரது மனைவி ரம்யா, 26.


கடந்த இரு ஆண்டுக்கு முன், பேளகொண்டப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ரம்யா வேலை செய்துள்ளார். அப்போது சரவணனுக்கும், ரம்யாவுக்கும் காதல் ஏற்பட்டது.

இருவரும், பெற்றோர் சம்மதத்துடன், 2010- ஜனவரி, 19-ம் திகதி, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது,ரம்யாவின் பெற்றோர், வரதட்சனையாக13 பவுன் நகை போட்டுள்ளனர்.

திருமணம் முடிந்து சில மாதங்களுக்கு பின், இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட துவங்கியது. சரவணன், குடும்ப செலவுக்காக, மனைவி நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக அடமானம் வைத்துள்ளார்.

எல்லா நகைகளும் அடகுகடைக்கு போனதும், மீண்டும், ரம்யாவை, பெற்றோர் வீட்டில், ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கி வருமாறு சரவணன் சித்ரவதை செய்துள்ளார்.

நேற்று முன்தினம், 26-ம் திகதி கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. பணம் வாங்கிவர  தன்னுடைய பெற்றோர்கள் வீட்டுக்கு போக ரம்யா மறுத்ததால் ஆத்திரமடைந்த சரவணன், வீட்டில் கிடந்த கத்திரிக்கோலை எடுத்து ரம்யா தலை முடியை வெட்டியுள்ளார், மேலும் வெளியே தப்பித்து போகமுடியதபடி வீட்டில் அடைத்துவைத்தும், ரம்யாவை பெல்டால் அடித்தும் சித்தரவதை செய்துள்ளார்.

இதை வெளியே யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதில் காயமடைந்த ரம்யா, பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் வீட்டில் இருந்து தப்பிச்சென்று,  ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.

போலீஸார் ரம்யாவை சிகிச்சைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு, இன்ஸ்பெக்டர் சித்ராதேவி இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து,மனைவி தலைமுடியை வெட்டிய சரவணனை கைது செய்து விசாரனை செய்துவருகிறார்.

thamilan thanks

No comments:

Post a Comment