அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 April 2013

தலைமுடியில் விளம்பரம் செய்யும் அமெரிக்க நபர்

[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல், 2013, ]
தலைமுடியில் விளம்பரம்
கேஸ்மை ஜோசப் என்ற அமெ­ரிக்க நபர் ஒருவர் தனது தலையை விளம்­ப­ரத்­திற்­காக பயன்படுத்தி வரு­கிறார். இவரை சுருக்­க­மாக கேஸ் என்று அழைப்­பார்கள். சில வரு­டங்­க­ளுக்கு முன் சலூ­னுக்குப் போய் இந்த ஸ்டைலில் முடியை வெட்டி அப்­ப­டியே நெட்­டுக்­குத்­த­லாக ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் பண்ணச் சொல்லி இருக்­கிறார். இதுக்கு 'ஆ­பி­ரிக்கன் பங்க்’ என்ற பெயரும் இருக்­கி­றதாம். இவர் இப்­படி முடி வெட்டக் காரணம் நண்­பனின் பெச்­சுலர் விருந்து. அந்த விருந்­துக்குப் போகையில், எதா­வது வித்­தி­யா­ச­மாகப் பண்ணி எல்­லோ­ரையும் திரும்பிப் பார்க்­க­வைக்­கணும் என்­பது கேஸின் வெறித்­த­ன­மான யோசனை.


கூடு­த­லாக 'நண்­பனின் விருந்­துக்கு எல்­லோரும் வாங்க’ என மண்­டையில் ஹேர் ஸ்பிரேயில் டிஸைன் எழுத்தில் அட்­ர­ஸோடு எழு­தியும் வைத்­து­விட போட்ட திட்டம் வெற்றி பெற்று விட்­ட -தாம். விருந்­தில் முக்­கிய அம்­சமே கேஸின் மண்­டை­தானாம். எல்­லோரும் வரிசை கட்டி வந்து மண்­டையைத் தட­விப்­பார்க்க ஆளும் குதூ­க­ல­மானார். நண்­பர்­களும், 'இதையே பிசினஸ் ஆக்­கிக்க கேஸ் என யோசனை கொடுத்து சின்­ன­தாகக் கடையும் போட்­டுக்­கொ­டுத்­தனர். கூடவே, விளம்­பர ஓடர்­களும் நண்­பர்­களே பிடித்­துக்­கொ­டுக்க, புளோரிடா மாகா­ணத்தில் பிர­பலம் ஆனார் கேஸ்.
டெலிவர் லீன் என்ற கேட்­டரிங் கம்­பெனி உள்ளூர் கால் பந்­தாட்டப் போட்­டிக்­கான விளம்­ப­ரத்தைத் தங்கள் சார்­பாக இவர் மண்­டையில் எழு­தி­வைக்கக் காசு கொடுத்­தனர். புளோரிடா மாகா­ணத்தில் இருக்கும் போர்ட் லாடர்டேல் நக­ரத்தில் இவர் இந்தத் தலை­யோடு ஒரு வாரம் முழுக்க நடைப்­ப­யணம் செய்ய 1,200 டொலர் சார்ஜ் பண்­ணி­னாராம். இந்த மண்­டையின் விளம்­பர அழகில் மயங்கி விளம்­பர வாய்ப்­புகள் குவிய ஆரம்­பித்­தன.

இப்­போது 25 விளம்­ப­ரங்­களை மண்­டையில் போட்டு சில்வர் ஜூபிலி கொண்­டா­டி­விட்டார். ''விளம்­ப­ரத்தை மண்­டையில் டிஸை­னாக போட்­டுக்­கொள்­வ­தோடு என் பணி முடிந்­து­வி­ட­வில்லை. டுவிட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் மீடி­யாக்­களில் என்­னு­டைய நடைப்­ப­யண வீடி­யோவை அப்­லோடு செய்து ஹிட்ஸ் அள்­ளு­கிறேன். வாரம் ஒரு கம்­பெ­னிக்கு என் மண்­டையை 'தலைஷீட் கொடுத்­து­வந்தேன். இப்­போ­தெல்லாம் வாரத்­துக்கு மூன்று முறை வித­வி­த­மாக டிஸைன் பண்ணி மூன்று வாடிக்­கை­யா­ளர்­களை அசத்­து­கிறேன்'' என்­கிற கேஸுக்கு இன்னும் கல்­யாணம் ஆக­வில்லை.

''திரு­மணம் செய்­து­கொள்ள இந்த விளம்பர விஷயம் தடையாக இல்லாத பெண்ணைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். என்னையும் என் மண்டையையும் புரிந்துகொண்ட ஒரு பெண் நிச்சயம் கிடைப்பாள்'' என்கிறார் சீரியஸாக!




viyapu thanks

No comments:

Post a Comment