அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 18 May 2013

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு! 20 லிட்டர் தண்ணீர் ரூ.200: மக்கள் அவதி

[ சனிக்கிழமை, 18 மே 2013, 
சென்னையில் 130 மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து வாட்டர் கேன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலத்தடி நீரை சுத்திகரிக்க 950 பேக்கேஜ் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 309 நிலையங்களில் சுத்திகரிக்கப்படும் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிறுவனங்களில் கேன் தண்ணீர் சரியாக சுத்திகரிக்காமல் சப்ளை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இது தொடர்பான வழக்கு சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் நடந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி, சுகாதாரமற்ற குடிநீர் தயாரித்த 130&க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன் நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர்.
இதை கண்டித்து தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கேன் தண்ணீர் சப்ளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் கேன் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் வாட்டர் கேன் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சென்னையில் 20 லிட்டர் வாட்டர் கேன் விலையை சிலர் கடுமையாக உயர்திவிட்டனர்.
ரூ.30க்கு விற்கப்பட்ட ஒரு கேன், இப்போது ரூ.100 வரை விற்கப்படுகிறது. குறிப்பிட்ட சில கம்பெனி கேன் வாட்டர் ரூ.200 வரை விற்கப்படுகிறது.
ரூ.2-க்கு விற்கப்படும் குடிநீர் பாக்கெட்டும் ரூ.5 வரை விற்கப்படுகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர் உற்பத்தியாளர் சங்க காப்பாளர் முரளி மற்றும் தலைவர் ராஜாராம் ஆகியோர் கூறுகையில், தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்.
திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் உற்பத்தியை நிறுத்த உள்ளோம் என்றனர்.
உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளதால் தமிழகம் முழுவதும் கேன் குடிநீருக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கேன் குடிநீர் தட்டுப்பாட்டால், சென்னை மாநகர மக்கள் மெட்ரோ வாட்டரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்


newindianews thanks

No comments:

Post a Comment