அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 14 May 2013

அரசு தொடக்கப் பள்ளிகளில் 20 மாணவர்களை சேர்த்தால் ஆங்கில வழிக் கல்வி தொடங்கலாம்! : கல்வித்துறை


வரும் கல்வி ஆண்டில் இருந்து அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி பாடம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விபிரிவைத் தொடங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஆரம்ப பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும், அவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்படும் என்றும் தமிழக கல்வித் துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

இதன் படி, ஏற்கனவே உள்ள தமிழ் பிரிவு அப்படியேதான் இருக்கும் என்றும், அதைப்பற்றி, தமிழக மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 மாணவர்கள் சேர்க்கை இருந்தால், அந்த பள்ளிகளில் இந்த ஆண்டே ஆங்கில வழிக் கல்வி பாடத்தைத் துவக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதை அடுத்து  தோராயமாக மாணவர்கள் சேர்க்கப்பட்ட பள்ளிகள் விவரம் குறித்த பட்டியல்களை தயாரித்து அங்கெல்லாம் இந்த ஆண்டே ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி வேண்டி அனுப்பி வைத்துள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள  பள்ளிகளில் மட்டுமின்றி கூடுதலாக பல பஞ்சாயத்து நகராட்சி மாநகராட்சி பள்ளிகளும் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

இந்த பிரிவில் சேரும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாட புத்தகங்களை கற்றுத் தரும் ஆசிரியர்கள் குறித்த பணிகளை தொடக்க கல்வித்துறை விரைவில் ஒழுங்குபடுத்தி செயல்படுத்த உள்ளது.

4tamilmedia thanks

No comments:

Post a Comment