அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 20 May 2013

தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்

[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம்.
புதுக்கோட்டையில் இந்திய மருத்துவர் சங்கம், மற்றும் தமிழக தனியார் கூட்டமைப்பு  கிழக்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த சங்கத்தின் மாநில தலைவர் தங்கவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக் அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் பட்டியலில் விடுபட்ட தனியார் மருத்துவ மனைகளையும் சேர்க்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
தனியார் நர்சிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடையாது என்று அறிவித்து உள்ளது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. அரசு தனது முடிவை ரத்து செய்து அவர்களும் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் வழி வகைகளை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் 2 ஆயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் ஆலோசனைப்படி, மருத்துவமனை விரிவாக்க சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் நுகர்பொருள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து மருத்துவமனைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


newindianews thanks

No comments:

Post a Comment