அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 24 May 2013

ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு 57-பேர் பலி

[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 
அக்னி வெயில் வடமாநில மக்களை வாட்டி வதைக்கிறது. தலைநகர் டெல்லியில் 113.5 டிகிரி வெயில் கொளுத்தியது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் 118 டிகிரியும், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் அதிகபட்சமாக 120 டிகிரியும் வெயில் பதிவானது. எப்போதும் குளு குளு என இருக்கும் ஜம்மு காஷ்மீரில் கூட 110 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது.

ஆந்திராவில் பல மாவட்டங்களில் நேற்று 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. கரீம்நகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 120 டிகிரி வெயில் கொளுத்தியது. ஆந்திர மாநிலத்தின் ஊட்டி என அழைக்கப்படும் விசாகப்பட்டினம் மன்னியம் மலைவாசஸ்தலத்தில் நேற்று 105 டிகிரி பதிவானது.

கடும் வெயிலால் மக்கள் பகலில் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். 11 மணிக்கே சாலைகள் வெறிச்சோடி போனது. மதியம் வீசும் அனல் காற்று இரவு 7 மணி ஆன போதிலும் குறையவில்லை.
அதோடு மின் வெட்டும் நிலவுவதால் மக்கள் நெருப்பு களத்தில் இருப்பது போல் உணருகிறார்கள். கடுமையான வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்.

120 டிகிரி வெயில் கொளுத்திய கரீம்நகர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் ஓடும் பஸ்சிலேயே மயங்கி விழுந்து இறந்தார். அவனது பெயர் ராஜேஷ் ரெட்டி. பிளஸ்-2 மறுதேர்வு எழுதி விட்டு வாரங்கலில் இருந்து பஸ்சில் கரீம்நகர் வந்து கொண்டு இருந்தார்.
இன்னும் 30 நிமிடத்தில் வீட்டுக்கு வந்து விடுவேன் என்று செல்போனில் தாயாருடன் பேசினார். சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. பஸ் இருக்கையில் சாய்ந்தபடியே பிணமானார்.

கண்டக்டர் டிக்கெட் எடுக்க அவரை எழுப்பிய போது அவன் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. மாநிலத்தில் அனல்காற்று மேலும் 2 நாள் நீடிக்கும் என விசாகப்பட்டினம் வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் பகலில் வெளியில் நடமாட வேண்டாம் என எச்சரித்து உள்ளது.

ஐதராபாத், கிருஷ்ணா, ஆதிலாபாத், நிஜாமாபாத், கரீம்நகர், நெல்லூர், பிரகாசம், குண்டூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று 2 நாள் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

newindianews. thanks

No comments:

Post a Comment