- THURSDAY, 16 MAY 2013 07:56

சென்னையில் மேலும் புதிதாக 7 தாலுகாக்களை, தமிழக அரசு விரிவு படுத்தி அறிவித்துள்ளது. நேற்று சட்டப்பேரவையில் இதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.
சென்னை மாவட்டத்தில் புரசைவாக்கம், அயனாவரம், அமைந்த கரை, வேளச்சேரி, கிண்டி, ஆகிய 5 இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவொற்றியூர், மதுரவயல் ஆகிய இடங்களில் புதிய தாலுக்கா அமைக்கப்படும் என்று, பேரவையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, புதிதாக அமையவுள்ள தாலுக்கா விவரமானது, கோட்டை-தண்டையார் பேட்டை தாலுகாவைப் பிரித்து புரசை வாக்கத்தில் புதிய தாலுகா. அடுத்து புரசைவாக்கம்-பெரம்பூர் தாலுக்காவை பிரித்து அயனாவரத்தில் புதிய தாலுக்கா.
எழும்பூர்-நுங்கம்பாகத்தை பிரித்து அமைந்த கரையில் புதிய தாலுக்கா. மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி தாலுக்காவைப் பிரித்து வேளச்சேரியில் புதிய தாலுக்கா. மாம்பலம் -கிண்டி தாலுக்காவைப் பிரித்து கிண்டியில் புதிய தாலுக்கா. மாதவரம் தாலுக்காவைப் பிரித்து திருவொற்றியூரில் புதிய தாலுக்கா. அம்பத்தூர் தாலுகாவைப் பிரித்து மதுரவயலில் புதிய தாலுக்கா என்று தமிழக அரசின் செய்தி குறிப்பில் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4tamilmedia thanks
No comments:
Post a Comment