அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 18 May 2013

பொறுப்புகளிலிருந்து தப்பி ஓடும் ஆள் நானில்லை : சிரிய ஜனாதிபதி


பொறுப்புகளிலிருந்து தப்பி ஓடும் ஆள் நானில்லை : சிரிய ஜனாதிபதி

பொறுப்புகளிலிருந்து தப்பி ஓடும் ஆள் நானில்லை : சிரிய ஜனாதிபதி

May 19, 2013  10:18 am
சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனாதிபதி ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராளிக் குழுக்கள் ஆயுதமேந்தி போரிட்டு வருகின்றனர்.

போரில் இது வரை 80 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15 இலட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த போரை நிறுத்துவதற்காகஅமெரிக்காவும் ரஷ்யாவும் சர்வதேச அமைதி மாநாட்டை நடத்த முயற்சி செய்து வருகிறது. இந்த மாநாடு அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெறும் முன், ஆசாத் பதவி விலக வேண்டும் என்று போராளிக் குழுக்களும்அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில்பத்திரிக்கை ஒன்றுக்கு அதிபர் ஆசாத் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,

சிரியாவில் ஆட்சியிலிருந்து யார் வெளியேற வேண்டும்இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் சிரியா மக்களின் அதிகாரத்தைஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் கெர்ரியோ அல்லது வேறு ஒருவரோ பெற்றக்கொண்டதாக எனக்கு தெரியவில்லை.

நான் பதவி விலகுவது தப்பி ஓடுவதாக இருக்கும். நான் பொறுப்புகளிலிருந்து தப்பி ஓடும் ஆளில்லை. 2014-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சிரியா மக்கள் யார் ஜனாதிபதி என்பதை முடிவு செய்வார்கள்.

இந்த சர்வதேச மாநாடுசிரியா மக்கள் சிக்கலான சூழ்நிலையிலிருந்து மீள உதவும் என்று நம்புகிறேன். ஆனால்சிரியா போராளிக்குழுக்களுக்கு ஆயுதம் வழங்கிவரும் மேற்கத்திய நாடுகள் இந்த பிரச்சினைகளுக்கு உண்மையிலேயே தீர்வு காண விரும்புகின்றன என்பதை நம்ப முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

thamilan thanks

No comments:

Post a Comment