தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டம் தூத்துக்குடியில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தி.மு.க.
பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அவர், ‘’சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது. வெற்றி- தோல்வியை ஒன்றாக கருதுபவன்தான் தி.மு.க. தொண்டன். அ.தி.மு.க. அரசின் இரண்டாண்டு கால ஆட்சியில் எவ்வித ஆக்கப்பூர்வ திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.
தூத்துக்குடி மக்கள் தேவைக்காக தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பக்கிள் ஓடை திட்டம் இதுவரை முடிக்கப்பட வில்லை. இத்திட்டம் தேவையில்லை என அ.தி.மு.க.வினர் கூறுகின்றனராம். அப்படியானால் இதுவரை கட்டப்பட்ட 8 கி.மீ. தொலைவுக்கான கான்கிரீட் சுற்றுச்சுவரை இடிக்க முடியுமா? சேதுசமுத்திர திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இத் திட்டம் தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரம், வளர்ச்சி அடையும், வேலை வாய்ப்பு பெருகி தூத்துக்குடி மேலும் வளர்ச்சி அடையும்’’என்று பேசினார்.

nakkheeran. thanks
No comments:
Post a Comment