- WEDNESDAY, 15 MAY 2013 04:05
பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற பாஜகவின் கோரிக்கையில் உடன்பாடு இல்லை என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
நிலக்கரி ஊழல், ரயில்வே பணிக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் ஆகிய புகார்களில் சம்பந்தப்பட்ட அஷ்வினி குமார், பவன்குமார் பன்சால் ஆகியோர் முறையே தங்களது சட்டத்துறை, ரயில்வேத் துறை ஆகிய தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் பதவி விலக வேண்டும் என்று பாஜக போர்கொடி தூக்கியுள்ளது. நிலக்கரி விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற முயன்ற அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் பட்சத்தில் பிரதமர் பதவியில் நீடிப்பதில் நியாயமில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
இந்நிலையில்தான் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் சேர்ந்த பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து கூறியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த நிதீஷ் குமார், "ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதத்தில் ஒரு விஷயத்தை பார்க்கின்றன. பிரதமர் ராஜினாமா கோரிக்கையில், பாஜகவுடன் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மத்திய அமைச்சர்கள் பன்சால், அஷ்வினி குமார் ராஜினாமா கால தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வேத் துறை நிலையற்றதாக உள்ளது. அடிக்கடி அமைச்சர்கள் மாற்றப்படுகின்றனர்.
உணவுப் பாதுகாப்பு மசோதாவை தற்போதுள்ள நிலையிலேயே நிறைவேற்றக் கூடாது. அதனைத் தாக்கல் செய்வதற்கு முன்பு நிறைய விவாதங்கள் நடத்த வேண்டும்."என்று நிதீஷ் குமார் பேசியுள்ளார். இது பாஜகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

4tamilmedia thanks
No comments:
Post a Comment