அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 19 May 2013

அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைக்கு வட கொரியாவை ரஷ்யா நிர்பந்திக்க வேண்டும்: பான் கி-மூன் கருத்து

[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:41.23 பி.ப GMT ]
ஐ.நா. சபை செயலாளர் பான் கி-மூன் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
அப்பொழுது வட கொரியா சமீபத்தில் குறைந்த தூரம் சென்று தாக்கும் 3 ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை செய்தது தொடர்பாக பான் கி-மூன் கூறுகையில், வட கொரியாவின் ஆத்திரமூட்டும் இந்த செயலை கண்டு நாம் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்.
இதைப் போன்ற செயல்களில் இருந்து வட கொரியா விலகிக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுடன் நடத்தி வந்த அணு ஆயுதக் குறைப்பு பேச்சு வார்த்தையில் இருந்து வடகொரியா விலகியே உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் மீண்டும் ஈடுபடுமாறு ரஷ்யா தனது செல்வாக்கை பயன்படுத்தி வட கொரியாவை நிர்பந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பான் கி-மூன் இவ்வாறு கூறிய பிறகும் வட கொரியா இன்றும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newsonews thanks

No comments:

Post a Comment