தனியார் பள்ளி வாகனங்களுக்கு விதித்துள்ள தீவிர கட்டுப்பாடுகளை கண்டித்து வரும் 1-ஆம் தேதி முதல் தனியார் பள்ளி வாகனங்கள் இயங்காது என்று தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், பள்ளிகளின் சங்கங்கள் அறிவித்துள்ளன. பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக பராமரிக்கப் படுகிறதா? தகுதி சான்று பெறப்பட்டுள்ளதா? குறிப்பிட்ட அளவு இருக்கைகள், கதவு, அவரச வழி போன்றவை விதிமுறைகள் படி உள்ளதா? என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். போக்குவரத்து விதிமுறைகளின் படி இல்லாத பள்ளி வாகனங்கள் இயக்க தடை செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படுகிறது. குறைகளை சரி செய்த பிறகுதான் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.மாணவர்களின் பாதுகாப்பு கருதி தனியார் பள்ளிகள் வாகனங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து தனியார் பள்ளி நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளன. பள்ளி வாகனங்களை இயக்குவதில் காட்டப்படும் தீவிர கெடுபிடியை கண்டித்து வருகிற 1-ஆம் தேதி முதல் தனியார் பள்ளி வாகனங்களை இயக்கப்போதில்லை என்று தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் சங்கம் அறிவித்துள்ளன.
news tamilantelevision thanks
|
No comments:
Post a Comment