- MONDAY, 03 JUNE 2013
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென மிகப் பெரும் அளவில் கோழி இறைச்சியைப் பதப்படுத்தி வரும் தொழிற்சாலை ஒன்று சீன ஜிலின் மாகாணத்தில் டெகுயி எனும் நகரத்தில் உள்ளது.
சுமார் 1200 தொழிலாளர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். இந்நிலைய்ல் திங்கட்கிழமை அதிகாலை இங்கு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதன்போது உடனே வெளியேற முடியாமையால் தீயில் கருகி 119 பேர் வரை பலியானதாக பிந்தி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தின் போது 54 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்ததாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்ட போதும் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலுமே அதிகமானோர் மரணிக்கக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 6 மணித்தியாலமாக கடும் முயற்சி செய்து தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் இவ்விபத்தின் விளைவால் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது. சிலர் கைதும் செய்யப் பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது 300 பேர் வரை உள்ளிருந்ததாகவும் இதில் 100 பேர் கதவை உடைத்துக் கொண்டு வெளியேறியதால் தப்பித்ததாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை தீயில் தப்பித்து வந்தவர்கள் தாம் வெளியேற முடியாத படி வெளிக் கேட்டுக்கள் யாவும் அடைக்கப் பட்டிருந்ததாக விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் இத்தொழிற்சாலையின் சிக்கலான கட்டுமானம் தீ விபத்து ஏற்படவும் அது பரவி அதிக மக்கள் வெளியேற முடியாத படி தடுக்கப் படவும் காரணம் என சீன அரசின் பொறியியலாளர்கள் மீதும் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது
..4tamilmedia thanks
No comments:
Post a Comment