அத்துடன், ஆபாச படங்கள் வெளியிடும் இணைய தளங்களை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடப்பட்டதினால் இது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது.
இணைய தள இணைப்புகள் தொலை தொடர்புத்துறை மூலம் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஆபாச படங்கள் வெளியிடும் இணைய தளங்களை தொலைத் தொடர்புத்துறை மூலம் முடக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
எந்தெந்த இணைய தளங்கள் ஆபாச படங்களை வெளியிடுகின்றன என்பதை தொலைத் தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையம் கண்காணித்ததில் 39 இணைய தளங்கள் முறைகேடாக ஆபாச படங்களை வெளியிட்டு வருவது கண்டுபிடித்தது.
இது போன்ற ஒளிபரப்புகளை தடுக்க சட்டத்தில் இடம் உள்ளதா என்றும் ஆலோசிக்கப்பட்டு அதற்கான சட்ட விதிமுறைகளும் ஆலோசிக்கப்பட்டன.
இதையடுத்து, இந்தியாவில் 39 இணைய தளங்கள் முடக்கப்படுகின்றன.
]
newindianews thanks
|
No comments:
Post a Comment