உத்தர பிரதேச மாநிலம் அலிகார் நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள வயல்வெளி பகுதிக்கு இளம் பெண் ஒருவரும், வாலிபரும் நேற்று முன் தினம் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
இளம் பெண்ணின் கையில் பிறந்து 10 நாட்களே ஆன ஒரு பச்சிளம் பெண் குழந்தை இருந்தது. சாலையோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த வாலிபர், இளம் பெண்ணில் கையிருந்த பெண் குழந்தையை வாங்கி வயல் வெளியில் சிறிது தூரம் சென்றார்.
அங்கு குழி ஒன்றை தோண்டி குழந்தையை அதில் போட்டு மண்ணை போட்டு மூடிவிட்டு திரும்பினார்.
இச்சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பார்த்து கூச்சலிட்டான். அவனின் குரலைக் கேட்டு அப்பகுதியில் நின்றிருந்த கிராமத்தினர் அங்கு வந்தனர்.
குழியில் புதைக்கப்பட்ட குழந்தையை மீட்டெடுத்து மருத்துவரிடம் எடுத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் பிடிக்க முற்பட்டனர், ஆனால் அவர்கள் தப்பி சென்றனர்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், குழந்தை மருத்துவரின் பராமரிப்பிலேயே இருக்குபடி கூறியுள்ளனர். அதேநேரத்தில் குழந்தையை உயிருடன் புதைத்து சென்ற வாலிபரையும், அவருடன் வந்த பெண்ணையும் தேடி வருகின்றனர்.
newindianews thanks |
No comments:
Post a Comment