- FRIDAY, 28 JUNE 2013 07:50
கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே இயற்கை எரிவாயு விலையை கிட்டத் தட்ட இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் மின்கட்டணம், யூரியா விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இந்தியாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஓஎன்ஜிசி போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இயற்கை எரிவாயு விலை கடந்த 2010ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு உயர்த்தப்படாததால் அதற்கான வழிமுறையை உருவாக்க பிரதமரின் பொருளாதார ஆலோசகரான சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
அந்த கமிட்டி தனது சிபாரிசில், இயற்கை எரிவாயு விலையை உயர்த்த வேண்டும் என்று, சிபாரிசு செய்து இருந்தது. அதன் அடிப்படையில் பெட்ரோலியத்துறை அமைச்சகம் இயற்கை எரிவாயு விலையை உயர்த்த யோசனை தேர்வித்தது. ஆனால் விலையை உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இயற்கை எரிவாயு விலையை உயர்த்தினால் மின்கட்டணம் உயரும் என்று மின்துறை அமைச்சகமும், உர விலை உயரும் என்று மத்திய உரத்துறை அமைச்சகமும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், பெட்ரோலிய அமைச்சகத்தின் யோசனையை ஏற்று, இயற்கை எரிவாயு விலையை ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. சி.ரங்கராஜன் கமிட்டி உருவாக்கிய வழிமுறைப்படி 3 மாதங்களுக்கு ஒரு தடவை உள்நாட்டு இயற்கை எரிவாயு விலையை மாற்றி அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, பொதுத்துறை மற்றும்க் தனியார் இயற்கை எரிவாயு உற்பத்தியாளருக்கும் பொருந்தும் என்றும் தெரிய வருகிறது.
4tamilmedia thanks
No comments:
Post a Comment