ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்கு, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்படி, காங்., கட்சியின், ஐந்து எம்.எல்.ஏ.,க்களும், கனிமொழிக்கு ஆதரவாக, நாளை ஓட்டு அளிக்க உள்ளனர்.
நேற்று நடந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில், எப்படி ஓட்டு அளிக்க வேண்டும் என்பது குறித்து கருணாநிதி அறிவுரை கூறினார். அப்போது பேசிய அவர், "அ.தி.மு.க., அணியில் காங்கிரசுக்கு இடம் இல்லை என, அக்கட்சி கதவை அடைத்து விட்டது. இதனால், காங்கிரசுக்கு நம்மை தவிர, வேறு கட்சிகளின் ஆதரவில் வெற்றி பெற முடியாது. அதனால், ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் நமக்கு ஆதரவு கொடுத்துள்ளது. மேலும் அனைத்து எம்.எல்.ஏக்களும் முதல் ஓட்டுக்களை மட்டுமே அளிக்க வேண்டும். இரண்டாம் ஓட்டுகளை யாரும் அளிக்க வேண்டாம் என கூறினார்.
காங்கிரஸின் முடிவை அறிந்து அதிர்ச்சியடைந்த விஜயகாந்த் நேற்று தே.மு.தி.க.,- எல்.ஏ.,க்கள் கூட்டத்தை தலைமை அலுவலகத்தில் கூட்டினார். கூட்டத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர் பங்கேற்கவில்லை. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட, 21 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விஜயகாந்த் பேசியது: ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்பதால், கவனமுடன் இருப்பது அவசியம். கட்சி வேட்பாளரின் ஏஜென்ட்டாக அனகை முருகேசன், அவருக்கு மாற்றாக மோகன்ராஜ்; கட்சியின் அதிகாரபூர்வ ஏஜென்ட்டாக வெங்கடேசன், அவருக்கு மாற்றாக பார்த்திபனை நியமித்துள்ளேன்.இவர்களிடம் ஓட்டுச்சீட்டை காட்டிய பின் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், இவர்கள் தேர்தல் அதிகாரியை நோக்கி, கையை உயர்த்தி, காட்டுவர். இப்படி காட்டினால், அந்த ஓட்டு செல்லாததாக தேர்தல் அதிகாரி அறிவித்து விடுவார். நமக்கு துரோகம் செய்த காங்கிரஸுக்கு நாம், விரைவில் பாடம் புகட்டுவோம். தேர்தல் முடிந்தபின், நான் யார் என்று காட்டுகிறேன்.

news thedipaar thanks
No comments:
Post a Comment