பாமகவிலிருந்து வெளியேறிய மாஜி மத்திய இணை அமைச்சர் பொன்னுசாமி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். ஜெயலலிதாவின் கொடநாடு பயணத்தின்போது இந்த சந்திப்பு நடந்தது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அண்மைக்காலமாக சாதிய அமைப்புகளை ஒன்றிணைத்து காதல் திருமணங்களுக்கு எதிராகவும் தலித்துகளை விமர்சித்தும் பேசி வந்தார்.
இதனால், அக்கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி வெளியேறினார். பாமகவில் இருந்து விலகிய அவர் அரசியலை விட்டே ஒதுங்குவதாகவும் அறிவித்தார்.
பொன்னுச்சாமி தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1999-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 2 முறை சிதம்பரம் லோக்சபா தொகுதி எம்.பி.யாக பொன்னுசாமி இருந்தார். அவர் 99 முதல் 2001 வரை பெட்ரோலிய துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.
இந்நிலையில் இன்று அவர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார்.
nakkheeran thanks
No comments:
Post a Comment