புதுடெல்லி, ஜூன் 24:-
இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில் தமிழகத்தில்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன என சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 4,40,042 சாலை விபத்துக்குள் நிகழ்ந்திருக்கின்றன. இதில், 1,39,091 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துக்களில் உயிரிழந்த 1,39,091 பேரில், 1,18,533 பேர் ஆண்கள். மீதம் உள்ளோர் குழந்தைகள் மற்றும் பெண்கள்.
சாலை விபத்துகளில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 67,757 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 16, 175 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. அங்கு நடந்த 24,478 சாலை விபத்துக்களில், 15,109 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள ஆந்திராவில் நடந்த 39,344 சாலை விபத்துக்களில், 14,966 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரம், தில்லி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த தகவலை தேசிய குற்றவியல் தகவல் கழகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.

news maalaimalar thanks
No comments:
Post a Comment