ராமேசுவரம், ஜுன். 28-
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுவிட்டு கரை திரும்பும் வரை அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் அச்சத்திலேயே இருப்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு காரணம் ஆர்ப்பரிக்கும் கடல் அல்ல... இங்கு அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை தான்.
நடுக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை குறி வைத்து தாக்கும் இலங்கை கடற்படையினர், படகுகளையும் சேதப்படுத்தி வருவதுண்டு. மேலும் தங்கள் நாட்டு எல்லையில் மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை பிடித்து சென்றும் விடுகின்றனர்.
அவ்வாறு பிடிக்கப்படும் மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது தான் வேதனையான ஒன்று. ஏற்கனவே இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் விடுவிக்கப்படாத நிலையில் மேலும் 4 மீனவர்கள் மாயமான சம்பவம் ராமேசுவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். இவர்கள் நேற்று கரை திரும்பிய நிலையில் ஜஸ்டின் என்பவரது படகு மட்டும் திரும்பவில்லை. அந்த படகில் இருந்த மீனவர்கள் ஜாக்சன், வில்டன், பரலோகராஜன், பரலோகராஜ் ஆகியோர் படகுடன் மாயமானதால் ராமேசுவரத்தில் அச்சம் ஏற்பட்டது.
நேற்று மாலை வரை 4 மீனவர்களும் கரை திரும்பாததால் அவர்களை இலங்கை கடற்படையினர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மாயமான மீனவர்களின் படகு, இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடித்து கொண்டிருந்ததை கண்டதாக சக மீனவர்கள் தெரிவித்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை 4 மீனவர்களும் கரை திரும்பாததால் அவர்களை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மாயமான மீனவர்களின் படகு, பழுது மற்றும் காற்றின் வேகம் காரணமாக எங்கேனும் கரை ஒதுங்கி நிற்கிறதா? அல்லது இலங்கை கடற்படையினரால் படகுடன் மீனவர்கள் கடத்தப்பட்டார்களா? என்பதில் மர்மம் நிலவுகிறது.

.maalaimala thanks
No comments:
Post a Comment