சட்டீஸ்கர் மாநிலம் குதெரா பகுதியை சேர்ந்த விவசாயி ராமேஷ்வர் பன்ஜாரி.
தனது நிலத்திற்கு அருகே சாய ஆலை இருப்பதால் விவசாயம் பண்ண முடியவில்லை என்றும், அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் மனு அளித்துள்ளார்.
மேலும் கலெக்டரிடம் முறையிட்ட அவர், நிவாரணம் கிடைக்கா விட்டால் தான் இறப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த அகர்வால், நீங்கள் விரும்பினால் போய் சாகுங்கள், அதற்கு எங்களிடம் அனுமதி பெற அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
கலெக்டரின் இந்த பேச்சு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
சிறிது நேரத்திற்கு பின் தவறை உணர்ந்த கலெக்டர், தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் அந்த விவசாயிக்கு செய்வதாக உறுதி அளித்ததுடன், இந்த பிரச்னைக்கான நிலையை கண்டறிய ஏற்கனவே தாங்கள் ஒரு குழுவை அந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
newindianews thanks |
No comments:
Post a Comment