டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிளின் 14 வயது மகன், அவர்களது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக அச்சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
டெல்லி விஜய் நகரில் குடியிருக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். அவ்வீட்டில் நொய்டாவில் பணி புரிந்து வருகிறார். சம்பவத்தன்று, போலீஸ்காரரின் மனைவியும், சிறுமியின் தாயாரும் மார்க்கெட்டுக்கு சென்று விட, அச்சிருமி மட்டும் தனிமையில் இருந்திருக்கிறாள்.
அதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட , ஏழாம் வகுப்பு படிக்கும் போலீஸ்காரரின் மகன், ஒன்றாம் வகுப்பு படிக்கும் அச்சிறுமியை பட்டம் விடலாம் எனக் கூறி மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளான். மார்க்கெட்டிலிருந்து திரும்பிய சிறுமியின் தாயார், மகளின் நிலை கண்டு அதிர்ந்து போயுள்ளார். உடனடியாக தனது கணவரை வரவழைத்து, அச்சிறுவன் மீது விஜய் நகர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். தற்போது அச்சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகவும், பரிசோதனை முடிவுகள் தெரிந்த பின்னரே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
tamilcloud thanks
No comments:
Post a Comment