புது டெல்லி:பாராளுமன்றம், மும்பை தாக்குதல்களை அரசே திட்டமிட்டு நடத்தியதாக வெளியான தகவலின் பின்னணியில் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவுச் செய்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சோசியல் டெமோக்ராடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் எ.ஸயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: முன்னாள் உள்துறை அண்டர் செகரட்டரி ஆர்.வி.எஸ்.மணி, ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மாவை மேற்கோள்காட்டி வெளியிட்ட தகவல்கள் பீதிவயப்படுத்தக் கூடிய வெட்கக் கேடாகும். மத்திய அரசு இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக போரை பிரகடனப்படுத்தியுள்ளதா? மணியும், வர்மாவும் கூறியது உண்மை என்றால் ஐ.மு அரசு மற்றும் முந்தைய என்.டி.ஏ அரசில் இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தவேண்டும்.முஸ்லிம்களை குறிவைப்பது காங்கிரஸ் மற்றும்பா.ஜ.கவின் அரசியல் அஜண்டாவா? தீவிரவாதத்தை ஒடுக்குவதில் அரசுக்கு உளப்பூர்வமான ஆர்வம் இருக்குமானால் எல்லா தீவிரவாத வழக்குகளையும் விசாரணைச் செய்ய ஒரு உயர்மட்ட கமிஷனைநியமிக்கவேண்டும்.முஸ்லிம்கள் மட்டுமே அனைத்து வழக்குகளிலும் கைதுச் செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.ஐ.பி தான் இதற்கு முக்கிய காரணம். அவர்கள் தங்களின் அரசியல் தலைவர்களை மகிழ்விக்க எந்த எல்லை வரையும் செல்ல தயாரானவர்கள்.முஸ்லிம்களை, குறிப்பாக இளைஞர்களை தீவிரவாத வழக்குகளில் உட்படுத்த ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் முயற்சிக்கின்றன. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.கவின் பி அணியாக செயல்படுகிறது.இவ்வாறு எ.ஸயீத் கூறியுள்ளார்.
news thoothuonline thanks
No comments:
Post a Comment