ராமநாதபுரம்,
ராமேசுவரம்-மதுரை இடையே பகல்நேர பயணிகள் ரெயில் கடந்த 1-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனை இருமார்க்கங்களிலும் ஏராளமானோர் பயன் படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த ரெயிலை நிறுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத்ராஜா இந்த ரெயில்கள் மண்டபம் கேம்ப், உச்சிப்புளி, வாலாந்தரவை ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
போகலூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளரும், போகலூர் ஒன்றியக்குழு கவுன்சிலருமான சிங்க ராசு, இந்த ரெயில்கள் சத்திரக்குடியில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், செயலாளர் குப்தா கோவிந்தராஜன் ஆகியோர் இந்த ரெயில்கள் பகல் நேரத்தில் இயக்கப்படுவதாலும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாலும் ராமேசுவரம்-மதுரை இடையே உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் மலைக்கண்ணன், தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் அவதிப்பட்டு வரும் வேளையில் விடப்பட்டள்ள இந்த பகல் நேர ரெயில் அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையிலும், ரெயில்வே துறையின் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் அனைத்து ரெயில்களிலும் மதுரை-ராமேசுவரம் இடையே நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து தரப்பு பிரிவினரின் கோரிக்கை ஏற்பட்டால் ரெயில்வே துறையின் வருவாய் இந்த ரெயிலில் மூலம் பல மடங்கு அதிகரிக்கும் என ரெயில்வே அதிகாரிகள் உறுதி கூறுகின்றனர்.

maalaimalar thanks
No comments:
Post a Comment