கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் விபரீதம் : நடிகை மஞ்சுளா விஜயகுமார் ‘திடீர்’ மரணம்
பிரபல நடிகை மஞ்சுளா விஜயகுமார் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 59.
நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து திடீரென்று கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இவர் குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியாவார். எம்ஜிஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் மூலம் கடந்த 1971-ஆம் ஆண்டு தமிழ்சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் மஞ்சுளா.
தொடர்ந்து “இதய வீணை, உலகம் சுற்றும் வாலிபன், பூக்காரி, நேற்று இன்று நாளை, உத்தமன், அவன் ஒரு சரித்திரம், சங்கர் சலீம் சைமன், குப்பத்து ராஜா, காலம் பதில் சொல்லும்” போன்ற பல ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்றார்.
சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பிரபல குணச்சித்திர நடிகரான விஜயகுமாரை காதல் திருமணம் செய்து கொண்ட அவர் சமீபகாலமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இவரது மருமகன் ஹரி தமிழ்சினிமாவில் பிரபல டைரக்டராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை மஞ்சுளாவின் எதிர்பாராத இந்த திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியும், கவலையும் ஏற்படுத்தியுள்ளது.
soundcameraaction. thanks
No comments:
Post a Comment