சென்னை: சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள சரவண பவன் ஓட்டல் குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களிலும், ஓட்டல் அதிபர் ராஜகோபால் வீட்டிலும், அடையார் ஆனந்த பவனிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஓட்டல் சரவண பவன். இங்கு மற்ற ஓட்டல்களை விட அதிக விலைக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சாப்பாடு 90 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதேபோல் அடையாறு ஆனந்த பவன் சுவீட் கடைகளிலும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை அடுத்து சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள சரவண பவன் ஓட்டல் குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூரு, விஜயவாடா, டெல்லி ஆகிய இடங்களில் உள்ள சரவண பவன் ஓட்டல்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.
சென்னை கே.கே.நகரில் உள்ள சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் வீட்டிலும், தூத்துக்குடியில் உள்ள பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அடையார் ஆனந்த பவனிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் சில தனியார் ஓட்டல்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையை அடுத்து உடனடியாக விற்பனை நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் யாரும் வெளியே அனுமதிக்கப்படவில்லை.
பிரபலமான சரவண ஓட்டல்கள், அடையார் ஆனந்த பவனில் சோதனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படம்: கார்த்திக்
No comments:
Post a Comment