அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 9 July 2013

கிராமப் புறங்களில் சட்டம்,ஒழுங்கு பிரச்னைகளை கண்டறிய பிஎல்ஓக்கள் நியமனம்

ராமநாதபுரம்: கிராமப் புறங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிய  வசதியாக, சிறப்பு எஸ்.ஐ.,க்கள் பஞ்சாயத்து நல்லுறவு அதிகாரிகளாக(பி.எல்.ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் வேறு எந்த பணிகளிலும் ஈடுபட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 429 பஞ்சாயத்துகள் உள்ளன. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல்கையிலும் சுமார் 10 பஞ்சாயத்துகள் வரை உள்ளன. இதில் சட்டம், ஒழுங்கு தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பொருட்டு, ஒரு போலீஸ் ஸ்டேஷனிற்கு தலா ஒரு சிறப்பு எஸ்.ஐ. வீதம், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் பஞ்சாயத்து நல்லுறவு அதிகாரி(பி.எல்.ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள், வி.ஏ.ஓ.க்கள், தலையாரிகளை தொடர்பு கொண்டு, அவர்களிடம் இருந்து கிராமங்களில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான தகவல்களை உடனுக்குடன் பெறுவர். அந்த தகவல்களை சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூலம் எஸ்.பி.யின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்வதே பி.எல்.ஓ.க்களின் பணியாகும். இந்த பி.எல்.ஓ.க்கள் ஸ்டேஷன்களில் வேறு எந்த பணிகளி லும் ஈடுபட மாட்டார்கள். 
இதுகுறித்து எஸ்பி மயில்வாகனன் கூறுகையில், `பி.எல்.ஓக்கள் கிராம மக்களிடையே நிலவும் பொதுப் பிரச்னைகள், குறைகளை அறிந்து, முன்கூட்டியே எஸ்.பி.யின் கவனத்திற்கு கொண்டு செல்வர். இதன் மூலம் பொதுமக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். பி.எல்.ஓ.க்கள் தங்கள் பகுதி பஞ்சாயத்துகளுக்கு செல்லும்போது கெட்ட நடத்தை உடையோர், வெளிநாடு செல்வதற்கு விண்ணப்பித்தோரின் பட்டியலை எடுத்துச் செல்ல வேண்டும். பி.எல்.ஓ.க்கள் அனைவரும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.பி.யின் நேரடி மேற்பார்வையில் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளதுÕ என தெரிவித்துள்ளார்.
news dinakaran thanks

No comments:

Post a Comment