அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 23 July 2013

தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு: விலை உயரும் என்று நகை வியாபாரிகள் அச்சம்!

தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால், தங்கத்தின் விலை உயரும் என்று வியாபாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

உலகிலேயே இந்தியாவில்தான் தங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.  ஆனால்,நம் நாட்டில் குறைந்த அளவே தங்கம்  கிடைப்பதால், தங்கத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய  வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

 தங்கத்துக்காகவும்,பெட்ரோலியப்  பொருட்களின் இறக்குமதிக்காகவும் அதிக அளவில் அன்னிய செலாவணி  செலவிடப்படுவதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. அதாவது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் ஆகும் தொகைக்கு இடையேயான வித்தியாசம் நடப்பு கணக்கு பற்றாக்குறை  எனப்படுகிறது.

கடந்த நிதி ஆண்டில்  இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 4.8  சதவிகிதம் அதிகரித்து உள்ளது. இதனால், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு,  மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. என்றாலும் தங்கம் ஒரு சிறந்த முதலீடு என்பதால், மக்கள் தங்கத்தை வாங்கவே விரும்புகிறார்கள்.

இந்நிலையில் தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யும் அனைத்து வங்கிகளும், அதிகாரம் பெற்ற ஏஜென்சிகளும், தாங்கள் இறக்குமதி செய்யும் தங்கத்தில் 20 சதவிகிதத்தை ஏற்றுமதிக்காக ஒதுக்க வேண்டும். மேலும் அதே அளவு தங்கத்தை சுங்கத் துறையிடம் இருப்பு வைக்க வேண்டும் என்கிற இந்த தகவலை ரிசர்வ் வங்கி தமது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த தங்கம் இறக்குமதி குறித்த புதிய கட்டுப்பாட்டு விதி முறைகளால், தங்கத்தின் விலை உயரும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். மும்பை நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சுரேஷ் ஹன்டியா இது குறித்து கூறுகையில், "இறக்குமதி செய்யும் தங்கத்தில் 20 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்வது  கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி  கூறியிருப்பதால், எந்த விலைக்கும் தங்கத்தை இறக்குமதி செய்தாக வேண்டிய நிர்பந்தம் இறக்குமதியாளருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்றுமதியில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், அந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக உள்நாட்டில் விற்கும் தங்கத்தின் விலையை ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும்.இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்." என்று கூறியுள்ளார்.

4tamilmedia thanks

No comments:

Post a Comment